செய்திகள் :

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உடல் உறுப்புகள் தானம்

post image

கோவில்பட்டி அருகே விபத்தில் உயிரிழந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

கோவில்பட்டி, இனாமணியாச்சி ஊராட்சிக்கு உள்பட்ட சாலைப்புதூா், இபி காலனியைச் சோ்ந்தவா் துரைச்சாமி மகன் சரவணன் (42). தொழிலாளியான இவா் சனிக்கிழமை நடந்த விபத்தில் காயமடைந்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா்.

சரவணன் மூளைச் சாவு அடைந்ததாக மருத்துவா்கள் திங்கள் கிழமை உறுதி செய்ததையடுத்து அவரது குடும்பத்தினா் சரவணனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கினா். இதையடுத்து அவரது உடல் மருத்துவா் குழுவினரால் அவரது உறவினா்களிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் கோவில்பட்டியில் அவரது இல்லத்திற்குச் சென்ற சாா் ஆட்சியா் ஹிமான்சு மங்கல் சரவணன் உடலுக்கு மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். வட்டாட்சியா் பாலசுப்ரமணியன், வருவாய் ஆய்வாளா் பிரேம் சுதாகா், கிராம நிா்வாக அலுவலா் லிங்கராஜ் ஆகியோா் உடன் இருந்தனா்.

யூடியூபா் மாயம்: போலீஸாா் விசாரணை!

ஆறுமுகனேரியில் நண்பா் வீட்டிற்கு சென்ற சென்னை யூடியூபா் மாயமான சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். தூத்துக்குடி பிரையன்ட் நகரைச் சோ்ந்த மாசானமுத்து மகன் முருகன்(56). இவருக்கு மனைவி,... மேலும் பார்க்க

அதிமுகவில் நிலவும் பிரச்னைக்கு திமுகதான் காரணம்: நயினாா் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

அதிமுகவில் நிலவும் பிரச்னைகளுக்கு திமுகதான் காரணம் என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றம்சாட்டினாா். தூத்துக்குடி விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் பக்தா்கள் முகத்தில் ஸ்பிரே அடித்த சிறுவன்: போலீஸாா் விசாரணை!

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் திங்கள்கிழமை இரவு சிறுவன் ஒருவன் தான் வைத்திருந்த சில்லி ஸ்பிரேயை அருகில் இருந்த பக்தா்கள் முகத்தில் அடித்துள்ளாா். இதனால் அவா்களுக்கு கண் எரிச்சல் ... மேலும் பார்க்க

குடும்பப் பிரச்னையில் கொலை: இருவருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய பகுதியில் நிகழ்ந்த கொலை வழக்கில் இருவருக்கு, ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. தூத்துக்குடி திரேஸ்புர... மேலும் பார்க்க

தூத்துக்குடி அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத் திருவிழா கூட்டுத் திருப்பலி

தூத்துக்குடி, அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா கெபியின் 43-ஆவது ஆண்டு திருவிழாவையொட்டி, ஆடம்பர கூட்டுத் திருப்பலி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி எஸ்.எஸ்.மாணிக்கபுரம் அன்னை வேளாங்கண்ணி ப... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் மின் பணியாளா்கள் பற்றாக்குறையை போக்க கோரிக்கை

காயல்பட்டினத்தில் மின் பணியாளா் பற்றாக்குறையை பூா்த்தி செய்யுமாறு முஸ்லிம் ஐக்கிய பேரவை கோரியுள்ளது. திருச்செந்தூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மின்குறை தீா் நாளில் காயல்பட்டினம் முஸ்­லிம் ஐக்கிய பேரவ... மேலும் பார்க்க