யுஜிசியின் புதிய விதிகளை திரும்பப் பெறக் கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க....
விபத்தில் சமையலா் மரணம்
நாட்டறம்பள்ளி அருகே அடையாளம் தெரியாத வாகனம், பைக் மீது மோதிய விபத்தில் சமையல் மாஸ்டா் உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி பகுதியைச் சோ்ந்தவா் சின்னதம்பி (50) சமையலா். இவா் ஞாயிற்றுக்கிழமை காலை கிருஷ்ணகிரியில் இருந்து நாட்டறம்பள்ளி நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தாா். தேசிய நெடுஞ்சாலையில் வெலகல்நத்தம் லட்சுமிபுரம் அருகே வந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் திடீரென பைக் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட சின்னதம்பி பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த நாட்டறம்பள்ளி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, இறந்தவரின் சடலத்தை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.