செய்திகள் :

விபரீதமான புத்தாண்டு: `இந்தப் பாட்ட மாத்து' சண்டையில் வாலிபர் அடித்துக்கொலை

post image
மும்பையில் நடந்த புத்தாண்டு பார்ட்டி வன்முறையில் முடிந்தது. மும்பை மீரா ரோட்டில் உள்ள மஹாடா குடியிருப்பு வளாகத்திற்கு அருகில் உள்ள டெல்டா கார்டனில் புத்தாண்டு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

பார்ட்டியில் அனைவரும் பாடலுக்கு நடனமாடிக்கொண்டிருந்தனர். அதில் அதிகமானோர் மது போதையில் இருந்தனர். மராத்தி பாடலுக்கு நடனமாடிக்கொண்டிருந்தனர். கூட்டத்தில் இருந்த சிலர் போஜ்புரி பாடல் போடவேண்டும் என்று தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. ஏற்கெனவே சிலர் குடிபோதையில் இருந்ததால் அவர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர். இதில் ராஜா, விபுல் ராய் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் இரண்டு பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜா நேற்று சிகிச்சை பலனலிக்காமல் இறந்துபோனார்.

விபுல்

அவர்கள் இரண்டு பேரையும் தாக்கிய ஆசிஷ் ஜாதவ் மற்றும் அவரின் தந்தை பிரகாஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரகாஷ் சகோதரர் உட்பட மேலும் இரண்டு பேரைத் தேடி வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். பார்ட்டியில் கலந்துகொண்ட பிரசாந்த் பாண்டே இதுகுறித்து அளித்த பேட்டியில், புத்தாண்டு பார்ட்டிக்கு மியூசிக் சிஸ்டம் வைக்கும்போதே ஆசிஷ் மற்றும் ராஜா இடையே தகராறு ஏற்பட்டது. நாங்கள்தான் சமாதானப்படுத்தினோம். கோபத்தில் சென்ற ஆசிஷ் அதிகாலையில் கம்பு மற்றும் இரும்புக் கம்பிகளுடன் உறவினர்களை அழைத்து வந்து ராஜாவை அடித்து உதைத்தனர்''என்றார். இது குறித்து ராஜாவின் மைத்துனர் திலிப் கூறுகையில்,'' ராஜாவை அடித்ததில் அவர் மயங்கி கீழே விழுந்தார். அப்படி இருந்தும் கூட ஆசிஷ் தொடர்ந்து கம்பால் அடித்தார். இதில் ராஜாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது''என்று தெரிவித்தார்.

புத்தாண்டு தினத்தன்று அந்தேரியில் மற்றுமொரு சம்பவம் நடத்திருக்கிறது.

மகளுக்கு வாழ்த்து சொல்ல வந்த தந்தைக்கு சுத்தியல் அடி

மும்பை அந்தேரி ஜுகு பகுதியில் புத்தாண்டு தினத்தன்று இரவு தனது மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வந்த தந்தை சுத்தியலால் தாக்கப்பட்டார். ஜுகு பகுதியைச் சேர்ந்த 65 வயது நபருக்கு 4 மகள்கள் இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. இதில் ஒரு மகள் அவரது வீட்டிற்கு அருகில் தன் கணவரோடு இருந்தார். அந்த மகளுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் திருமணம் தாண்டிய உறவு இருந்தது. அந்த உறவைக் கைவிடும்படி 65 வயது தந்தை கேட்டுக்கொண்டார். ஆனால் மகள் கைவிடவில்லை. புத்தாண்டு அன்று அப்பெண்ணின் கணவர் தனது சொந்த ஊருக்கு சென்று இருந்தார். எனவே தன் மகளுக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்லவேண்டும் என்ற நோக்கில் 65 வயது தந்தை மகள் வீட்டிற்கு வந்தார். அங்கு மகளின் காதலனும் இருந்தார்.

Representational Image
மாதிரிப் படம்

இதனால், `இங்கு ஏன் இருக்கிறாய்?' என்று அந்த நபரிடம் 65 வயது தந்தை கேட்டார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், `எனக்கும் என் காதலிக்கும் இடையில் வந்தால் உன்னை கொலை செய்து விடுவேன்' என்று கூறிக்கொண்டு வீட்டில் கிடந்த சுத்தியலை எடுத்து 65 வயது நபர் மீது அப்பெண்ணின் காதலன் தாக்கினார். இதில் தலை, தோள் உட்பட உடம்பின் பல இடங்களில் காயம் ஏற்பட்டு 65 வயது நபர் கீழே விழுந்தார். உறவினர்களும், பக்கத்து வீட்டுக்காரர்களும் தலையிட்டு அவர் தாக்கப்படுவதைத் தடுக்க முயன்றனர். 65 வயது நபரைத் தாக்கிவிட்டு அப்பெண்ணின் காதலன் தப்பி ஓடிவிட்டார்.

அவரை உடனே மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். போலீஸார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தாக்குதல் நடத்திய நபரை கைது செய்துள்ளனர்.

சென்னை: தொழிலதிபரை நம்பவைத்து ரூ.10 லட்சம் மோசடி; `சென்ட்டிமென்ட்' சங்கர் சிக்கியது எப்படி?

திருச்சி மாவட்டம், இளங்காகுறிச்சி, பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் முகமது நசுருதீன் (43). இவர் கட்டட பொருள்கள் சப்ளை மற்றும் பெயின்டிங் வேலை செய்து வருகிறார். இவருக்கு தொழில் முறையில் சுதன் என்பவர் மூல... மேலும் பார்க்க

இலங்கை: கிலோ கணக்கில் தொடர்ந்து சிக்கும் தங்கம்; `பாக் நீரிணை’ பகுதியும் தங்கம் கடத்தலும்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே கடல் வழியாக போதை பொருட்களான கஞ்சா, போதை மாத்திரைகள், வலிநிவாரணி மாத்திரைகள், பீடி பண்டல்கள், தங்க கட்டிகள் ஆகியன கள்ளத்தனமாக கடத்தி செல்வது வாடிக்கையாகி வருகிறது. இந... மேலும் பார்க்க

கோவை: கரூர் கம்பெனி Vs டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் - வெடிக்கும் பஞ்சாயத்து

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2023ம் ஆண்டு சிறைக்கு செல்வதற்கு முன்பு டாஸ்மாக் துறையில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. பார் உரிமையாளர்களிடம் கறார் வசூல், டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங... மேலும் பார்க்க

ISKCON: ஆரம்பத்தில் சின்ன சின்னதாய்; இப்போது லட்சக்கணக்கில் - கோயில் பணத்துடன் ஓட்டம் பிடித்த ஊழியர்

ஆக்ராவில் லட்சக்கணக்கில் கோயில் பணத்தை ஏமாற்றிவிட்டு தலைமறைவாகி உள்ளார் இஸ்கான் ஊழியர் ஒருவர். ஆக்ரா பிருந்தாவனத்தில் உள்ள இஸ்கான் அமைப்பில் 2019-ம் ஆண்டு சேர்ந்துள்ளார் முரளிதர் தாஸ் என்பவர். இந்த சம... மேலும் பார்க்க

`மனைவிக்கு பாடம் கற்பிக்கிறேன்' - பெற்றோர் வீட்டுக்குச் சென்று திரும்பி வராததால் கணவர் விபரீத முடிவு

குஜராத்தில், மனைவிக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்று கணவன் தூக்குபோட்டுத் தற்கொலைசெய்து கொண்ட சம்பவம் அவர் செல்போன் வீடியோ மூலம் தற்போது வெளியில் தெரியவந்திருக்கிறது. போலீஸாரின் கூற்றுப்படி, பொடாட் ... மேலும் பார்க்க

போலி ஆவணங்கள்; பனியன் நிறுவனத்தில் பணி... திருப்பூரில் தங்கியிருந்த வங்கதேசத்தவர்கள் 6 பேர் கைது!

திருப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புற நகரங்களில் உள்ள பனியன் நிறுவனங்களில் வடமாநிலத் தொழிலாளர்கள் அதிகம் பணியாற்றி வருகின்றனர். அதிலும், குறிப்பாக மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், ம... மேலும் பார்க்க