அந்தப் பாடலுக்கே ரசிகர்கள் செலவிடும் பணம் சரியாக இருக்கும்: எஸ். ஜே. சூர்யா
`மனைவிக்கு பாடம் கற்பிக்கிறேன்' - பெற்றோர் வீட்டுக்குச் சென்று திரும்பி வராததால் கணவர் விபரீத முடிவு
குஜராத்தில், மனைவிக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்று கணவன் தூக்குபோட்டுத் தற்கொலைசெய்து கொண்ட சம்பவம் அவர் செல்போன் வீடியோ மூலம் தற்போது வெளியில் தெரியவந்திருக்கிறது. போலீஸாரின் கூற்றுப்படி, பொடாட் மாவட்டத்திலுள்ள ஜம்ராலா கிராமத்தில் சதாதியா என்றறியப்படும் கணவர் டிசம்பர் 30-ம் தேதியன்று தனது வீட்டில் தற்கொலை செய்திருக்கிறார்.
அதைத்தொடர்ந்து, சதாதியாவின் பெற்றோர் தங்களின் மருமகள் ஜெயபென் மீது போலீஸில் புகாரளித்தார். அந்தப் புகாரில், தங்களின் மருமகள் தனது மகனுடன் அடிக்கடி சண்டை போட்டு மனரீதியாகத் துன்புறுத்தியதாகவும், அவ்வப்போது பெற்றோர் வீட்டிற்குச் சென்றதாகவும் குறிப்பிட்ட சதாதியாவின் பெற்றோர், ஜெயபென்னை தனது மகன் வீட்டுக்கு வரும்படி அழைத்தபோது அவர் வராததால் வீடியோ பதிவுசெய்து தற்கொலை செய்துகொண்டதாகப் பதிவுசெய்தனர்.
அவர்கள் அளித்த புகாரின் பேரில், கடந்த வெள்ளிக்கிழமையன்று ஜெயபென் மீது, பாரதிய நியாய சந்ஹிதாவின் (BNS) பிரிவு 108 (தற்கொலைக்குத் தூண்டுதல்) கீழ் போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்தனர். மேலும், சதாதியா தற்கொலை செய்துகொள்வதற்கு முன் தனது செல்போனில் பதிவுசெய்திருந்த வீடியோவில், தனது மரணத்துக்கு காரணமான மனைவிக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்று அவர் பேசியிருந்ததாக பொடாட் கிராமப்புற காவல் நிலைய அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார்.
VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...