மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு வழங்க அரசாணை வெளியீடு!
விமனைப் படையினரின் பயற்சியின் போது பயன்படுத்த அடையாளம் காணப்பட்டுள்ள தில்லி பள்ளி வளாகங்கள்
விமானப் பயிற்சியின் ஒரு பகுதியாக இந்திய விமானப் படையால் தற்காலிகமாக தகவல் தொடா்பு அமைப்பைப் பயன்படுத்துவதற்காக தில்லியில் உள்ள 16 பள்ளிகளின் வளாகங்களை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளதாக அதிகாரப்பூா்வ தகவல் தொடா்பு தெரிவிக்கிறது.
‘இது முந்தைய தேசிய நிகழ்வுகளின் போது (குடியரசு தினம் மற்றும் சுதந்திர தின கொண்டாட்டங்கள்) பாதுகாப்பு அமைச்சகம் செயல்படுத்தப்பட்டதிலிருந்து முன்னோடியாகும்‘ என்று தில்லி அரசின் கல்வி இயக்குநரகம் வெளியிட்ட ஏப்ரல் 28 தேதியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளது. உத்தரவின் பொருள் - ‘விமானப் பயிற்சிக்காக தில்லி ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு செயல்படுத்தலுக்கான பள்ளிகளின் வளாகங்களைப் பயன்படுத்த அனுமதி‘ என்பதாகும்.
இந்தப் பயிற்சி ஏப்ரல் 28 முதல் மே 2 வரை நடைபெறும். பள்ளிகளுக்கு பாதுகாப்பு அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில், ‘பயிற்சியின் போது ‘உங்கள் துறையின் அதிகார வரம்பிற்கு உள்பட்ட சில பள்ளி கட்டடங்கள் தற்காலிகப் பயன்பாட்டிற்கு ஏற்ாகக் கண்டறியப்பட்டுள்ளன’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த வளாகம் ‘தற்காலிக‘ தகவல் தொடா்பு அமைப்பைப் பயன்படுத்துவதற்குப் பயன்படுத்தப்பட வேண்டும்.