செய்திகள் :

விமானப் படை மேற்கு மண்டல தளபதியாக ஜிதேந்திர மிஸ்ரா பொறுப்பேற்பு!

post image

புது தில்லி: விமானப் படை மார்ஷல் ஜிதேந்திரா மிஸ்ரா இந்திய விமானப் படையின் மேற்கு மண்டல கட்டளைப் பிரிவின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார்.

முன்னதாக, இப்பதவியை வகித்து வந்த பங்கஜ் மோகன் சின்ஹா விமானப் படையில் தனது 39 ஆண்டுகால சேவையை நிறைவு செய்துள்ள நிலையில் செவ்வாய்க்கிழமை(டிச. 31) ஓய்வு பெற்றார். இதையடுத்து, லடாக் மற்றும் அதையொட்டியுள்ள வட இந்தியாவின் சில பகுதிகளில் வான் வழிப் பாதுகாப்பை உறுதி செய்யும் மேற்கு மண்டல கட்டளைப் பிரிவின் தளபதியாக ஜிதேந்திரா மிஸ்ரா புத்தாண்டு நாளான இன்று(ஜன. 1) பொறுப்பேற்றுக் கொண்டார்.

விமானப் படையில் 38 ஆண்டு கால அனுபவமிக்கவரான ஜிதேந்திரா மிஸ்ரா விமானப் படை விமானியாகவும், அதன் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் ஒத்திகைகளில் தலைமையேற்று நடத்தியுள்ளதுடன், விமானம் மற்றும் அதன் சோதனை அமைப்பில்(ஏஎஸ்டிஇ) தலைமை விமானியாகவும், விமானப்படை தலைமையகத்தில் உதவி தளபதியாகவும் (திட்டப் பணிகள்) உள்பட பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்தவர். விமானப்படையில் இவரது சேவையைப் பாராட்டி உயர் விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.

பெங்களூரில் உள்ள தேசிய பாதுகாப்புப் பயிற்சி மையம் மற்றும் விமானப் படை விமானிகள் பயிற்சி பள்ளி, அமெரிக்காவிலுள்ள விமான கட்டுப்பாட்டு மற்றும் விமானப் படை பணியாளர் கல்லூரி, பிரிட்டனிலுள்ள பாதுகாப்பு ஆராய்ச்சிக்கான ராயல் கல்லூரி ஆகியவற்றில் பயிற்சி பெற்ற முன்னாள் மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தில்லியில் பெண்களுக்கு மாதம் ரூ.2,500: இது காங்கிரஸின் வாக்குறுதி!

தில்லியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 உதவித்தொகை வழங்குவதற்காக பியாரி திதி யோஜனா திட்டத்தை அறிவித்துள்ளது. தலைநகர் தில்லியில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெ... மேலும் பார்க்க

எச்எம்பிவி வைரஸ் பாதிப்புக்கும் சீனாவுக்கும் தொடர்பில்லையா? சுகாதாரத் துறை

சீனாவில், மனிதர்களைத் தாக்கும் மெடாநியூமோவைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாகத் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், இந்தியாவில் இரண்டு குழந்தைகளுக்கு இந்த எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட... மேலும் பார்க்க

சண்டீகரில் அடுக்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது

சண்டீகரில் பாதுகாப்பற்றதாக அறிவிக்கப்பட்ட அடுக்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது. சண்டீகரின் செக்டார்-17ல் பாதுகாப்பற்றதாக அறிவிக்கப்பட்ட அடுக்கு மாடிக் கட்டடம் திங்கள்கிழமை காலை இடிந்து விழுந்தது. ... மேலும் பார்க்க

இந்தியாவில் 2 குழந்தைகளுக்கு எச்எம்பிவி தொற்று!

பெங்களூருவைச் சேர்ந்த 3 மாத பெண் குழந்தை மற்றும் 8 மாத ஆண்டு குழந்தைக்கு எச்எம்பிவி தொற்று உள்ளதாக ஐசிஎம்ஆர் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் பார்க்க

திரிபுராவில் பிப்ரவரிக்குள் மின்சார ரயில்கள் இயக்கப்படும்!

வடகிழக்கு மாநிலத்தில் முக்கிய மின்மயமாக்கல் திட்டம் நிறைவடைந்துள்ள நிலையில், வரும் பிப்ரவரி மாதத்து‘க்குள் திரிபுராவில் மின்சாரம் மூலம் இயங்கும் ரயில்கள் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மா... மேலும் பார்க்க

பாட்னாவில் பிரசாந்த் கிஷோர் கைது

பாட்னாவில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் கைது செய்யப்பட்டுள்ளார். திங்கள்கிழமை அதிகாலை அவர் கைது செய்யப்பட்டதாக உயர் அதிகாரி ஒருவர் தெர... மேலும் பார்க்க