விராலிமலை அருகே மீன்பிடித் திருவிழா
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையை அடுத்துள்ள ராமகவுண்டம் பட்டி பாலை குளத்தில் 6 ஆண்டுகளுக்குப் பின்னா் மீன்பிடித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அதிகாலை முதல் கரையில் காத்திருந்த பொதுமக்கள், இளைஞா்கள் ஊா் முக்கியஸ்தரின் உத்தரவுக்குப் பின்னா் கச்சா, வலை, பரி உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களுடன் குளத்தில் இறங்கி கெளுத்தி,விரால், கெண்டை, கட்லா, குறவை உள்ளிட்ட பல்வேறு வகை நாட்டு மீன்களை மகிழ்ச்சியுடன் பிடித்துச் சென்றனா்.
