செய்திகள் :

விருதுநகர்: ஏலக்காய் தோட்டத்தில் கள்ளச்சாராயம், வனவிலங்கு வேட்டை; 6 பேர் கைதின் பின்னணி என்ன?

post image

விருதுநகர் மாவட்டம் சேத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலையில் சூரியன்கல் எஸ்டேட் அமைந்துள்ளது. இந்த எஸ்டேட்டில் ஏலக்காய், கிராம்பு உட்பட நறுமணப் பொருட்கள் விளைவிக்கப்படுகின்றன.

இந்த எஸ்டேட்டை தேவதானத்தைச் சேர்ந்த கடற்கரை என்பவர் குத்தகைக்கு எடுத்துப் பராமரித்து வந்துள்ளார். இவரது மகன்களான சண்முககுமார், செல்வகுமார் மற்றும் சிவகிரியைச் சேர்ந்த தங்கப்பாண்டியன், மாரியப்பன், ராஜபாளையம் திருவள்ளுவர் தெரு வேங்கை ஆகியோரும் தோட்ட வேலை பார்த்துள்ளனர்.

மேலும் எஸ்டேட் தோட்டத்தின் காவலாளியாக தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த ஊமைத்துரை என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளார்.

சேத்தூர் காவல் நிலையம்
சேத்தூர் காவல் நிலையம்

இவர்கள் 7 பேரும் சேர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல், நாட்டுத் துப்பாக்கியைப் பயன்படுத்தி மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடுதல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக வனத்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து வனவர் கனகராஜ் தலைமையில் வனக் குழுவினர் அந்தப் பகுதிக்கு ரோந்து சென்று பார்த்த போது அங்குக் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டதுடன் நாட்டுத் துப்பாக்கியைப் பயன்படுத்தி வனவிலங்குகள் வேட்டையாடப்பட்டதும் உறுதி செய்யப்பட்டன.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியிலிருந்த 5 லிட்டர் சாராய ஊறல், 2 நாட்டுத் துப்பாக்கி ஆகியவை பறிமுதல் செய்து 6 பேரைக் கைது செய்தனர். பறிமுதல் செய்த நாட்டுத் துப்பாக்கியை சேத்தூர் காவல் நிலையத்திலும், பறிமுதல் செய்த கள்ளச்சாராயத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் மதுவிலக்கு போலீசாரிடமும் ஒப்படைத்துள்ளனர். தப்பி ஓடிய வேங்கை என்பவரை வனத்துறையுடன் இணைந்து போலீசார் தேடி வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

ஆம்பூர் கலவர வழக்கு: `22 பேர் குற்றவாளிகள்’ -முன்னாள் எம்.எல்.ஏ சொத்துகளைப் பறிமுதல் செய்ய உத்தரவு!

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் 24-ம் தேதி திடீரென மாயமானார். அது குறித்து, பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் அடிப்படைய... மேலும் பார்க்க

சத்தீஸ்கர் வெள்ளம்: அடித்துச் செல்லப்பட்ட கார் - தமிழகத்தைச் சேர்ந்த ஒரு குடும்பமே பலியான துயரம்!

திருப்பத்தூர் மாவட்டம், பாரண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 43). இவரின் மனைவி பவித்ரா (40), மகள்கள் சௌஜைன்யா (8), சௌமையா (6). சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் கடந்த 15 ஆண்டுகளாக கட... மேலும் பார்க்க

கூடலூர்: போக்கு காட்டும் புலி, கேரளாவிலிருந்து பிரத்யேக கூண்டை வரவழைத்த வனத்துறை - என்ன நடக்கிறது?

நீலகிரி மாவட்டத்தில் மனித - வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக கூடலூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் எதிர்கொள்ளல்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த... மேலும் பார்க்க

மும்பை: 'தந்தையின் பாதை எனக்கு வேண்டாம்' - தாதா வரதராஜன் மகன் மோகன் மறைவு; தமிழ் அமைப்புகள் இரங்கல்

மும்பையில் வரதராஜன் முதலியார் இறந்த பிறகு அவரது மகன்கள் யாரும் அவரது வழியைப் பின்பற்றாமல் தங்களுக்குத் தனித்தனி வழியை ஏற்படுத்திக்கொண்டனர். அதில் மோகன் மட்டும் தொடர்ந்து மும்பையில் வாழ்ந்து வந்தார்.மு... மேலும் பார்க்க

விஷப்பூச்சி கடித்து மாற்றுத்திறனாளி சிறுவன் உயிரிழப்பு - வேலூரில் அதிர்ச்சி!

வேலூர், விருப்பாட்சிபுரம் காந்தி நகரைச் சேர்ந்த முடிதிருத்தும் சலூன் தொழிலாளி ரமேஷ். இவரின் 13 வயது மகன் சஞ்சய், வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளி ஆவார். விநாயகர் சதுர்த்தியையொட்டி, நேற்று இரவு 8 மணியள... மேலும் பார்க்க

சரிவு பகுதியில் அத்துமீறி வுட் ஹவுஸ் கட்டிய ஆந்திரா க்ரூப்; அதிரடி காட்டிய அதிகாரிகள்- பின்னணி என்ன?

இந்தியாவின் முதல் பல்லுயிர் பெருக்க வள மண்டலமாக அறிவிக்கப்பட்டிருக்கும் நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றுலாவின் பெயரால் பல்வேறு விதிமீறல்களை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்ப... மேலும் பார்க்க