செய்திகள் :

விருதுநகர்: பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து; 2 பேர் உயிரிழப்பு... 3 பேர் படுகாயம்!

post image

விருதுநகர் மாவட்டம், காரியாப்பட்டி அருகேயுள்ள வடகரை கிராமத்தில் மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த ராஜசந்திரசேகர் என்பவருக்குச் சொந்தமான ’யுவராஜ் பட்டாசு ஆலை’ இயங்கி  வருகிறது.‌ இந்த பட்டாசு ஆலையில் உள்ள 30-க்கும் மேற்பட்ட அறையில் காரியாபட்டி, கரிசல்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள்  வேலை செய்து வருகின்றனர். இந்த பட்டாசு ஆலை, நாக்பூர் உரிமம் பெற்று இயங்கி வருகிறது.  இங்கு அணுகுண்டு, சீனி வெடி போன்ற பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.  

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி

இந்த நிலையில், இன்று பட்டாசு ஆலை திறக்கப்பட்டு வழக்கம் போல் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். அப்போது இந்த பட்டாசு ஆலையின் ஒரு அறையில் கல்குறிச்சியைச் சேர்ந்த சௌண்டம்மாள், தண்டியனேந்தலைச் சேர்ந்த முருகன், பேச்சியம்மாள், கருப்பையா மற்றும் கணேசன் அச்சங்குளத்தை சேர்ந்த மாரியம்மாள் ஆகிய 6 நபர்கள்கள் சீனி வெடி மற்றும் அணுகுண்டு பட்டாசு தயாரிக்கும் மருந்து செலுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.  

அப்போது ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரு அறை முற்றிலும் தரைமட்டமானது. இதில், அந்த அறையில் வேலை செய்து கொண்டிருந்த கருப்பையா, சௌண்டம்மாள் ஆகிய இருவரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.  மேலும் படுகாயமடைந்த கணேசன், பேச்சியம்மாள், முருகன், மாரியம்மாள் ஆகிய மூவரையும் மீட்ட தீயணைப்பு வீரர்கள் 108 ஆம்புலன்ஸில் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  வெடி விபத்து நடந்த இடத்தில் திருச்சுழி காரியாபட்டி, அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளில் சிக்கியவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

அமைச்சர் தங்கம் தென்னரசு நலம் விசாரிப்பு

விபத்து நடந்த பட்டாசு ஆலையின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்பட்டது. மேலும், இந்த விபத்து தொடர்பாக காரியாபட்டி போலீஸார் வழக்குப் பதிந்து பட்டாசு ஆலை மேலாளர் கல்குறிச்சியைச் சேர்ந்த வீரசேகரன், போர்மேன் கனிமுருகன்  ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள ஆலையின் உரிமையாளர் ராஜா சந்திரசேகரை  காரியாபட்டி காவல் நிலைய போலீஸார்  தேடி வருகின்றனர்.

விபத்தில் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். அப்போது, அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பேட்டியில், “பட்டாசு ஆலை விபத்துக்கான உரிய காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் மேற்கொண்டு வருகிறார்.

வெடி விபத்தில் தரைமட்டமான அறை

காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப் படுவார்கள்.” என்றார். முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்த 2 பேருக்கு தலா ரூ.4 லட்சமும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

``யூ டியூப் பார்த்து கழிவறையில் சுயபிரசவம்'' - 2 குழந்தைகளை கொன்று புதைத்த பெண்.. பகீர் வாக்குமூலம்

கேரள மாநிலம் திருச்சூர் புதுக்காடு அருகே உள்ள மட்டனூரைச் சேர்ந்தவர் அனீஷா(22). லேப் டெக்னீசியனான இவருக்கும் ஆம்பல்லூரைச் சேர்ந்த பபின்(25) என்ற இளைஞருக்கும் முகநூல் மூலம் 5 ஆண்டுகளுக்கு முன் காதல் மலர... மேலும் பார்க்க

வேலூர்: கோட்டையில் செல்போன் பறிப்பு; எஸ்கேப்பாக அகழியில் குதித்த இளைஞர்- காப்பாற்றி கைதுசெய்த போலீஸ்

வேலூர் என்று சொன்னாலே சட்டென நினைவுக்கு வருவது வேலூர் கோட்டை தான். வேலூர் கோட்டைக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். அந்த வகையில் நேற்று வேலூர் கோட்டையை சுற்றி பார்க்க வந்த... மேலும் பார்க்க

`திருட்டு நகையை பறிமுதல் செய்வதாக அச்சுறுத்தி போலீஸார் கொள்ளையடிக்கின்றனர்'- நகை வியாபாரிகள் குமுறல்

தஞ்சாவூர், தென் கீழ் அலங்கம், பகுதியில் நகைக் கடை நடத்தி வருபவர் சரவணன். இவர் திருட்டு நகைகளை வாங்கியுள்ளதாகக் கூறி கடந்த ஜூன் 24ம் தேதி விசாரணைக்கு வந்த பெரம்லுார் போலீஸார் சரவணனை வேனில் அழைத்து சென... மேலும் பார்க்க

திருப்புவனம்: "தண்ணீர்கூட கொடுக்காமல் கண்களில் மிளகாய்ப்பொடி தூவி சித்ரவதை" - ஹென்றி திபேன்

திருபுவனத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நகை காணாமல் போன புகாரில், எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்வதற்கு முன்பாகவே விசாரணை நடைபெற்றது. மானாமதுரை டி.எஸ்.பி தலைமையில் செயல்படும் தனிப்படை போலீஸார் விசாரணை என்ற பெயரில் கோ... மேலும் பார்க்க

`குண்டு வச்சிருக்கோம்..’ - தென்காசி முகவரியில் இருந்து வேலூர் ஆட்சியருக்கு வந்த மிரட்டல் கடிதம்!

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சத்துவாச்சாரியில் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையோரம் இருக்கிறது. அருகிலேயே எஸ்.பி அலுவலகமும் உள்ளது. இந்த நிலையில், `பெறுநர் - ஆட்சியர்’ எனக் குறிப்பிட்டு, `விடுநர் - ... மேலும் பார்க்க

சிவகங்கை எஸ்.பி-யை ஏன் சஸ்பெண்ட் செய்யவில்லை? - உயர்நீதிமன்றம் எழுப்பிய கேள்விகள்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் காளி கோயிலில் காவலாளியாக வேலை பார்த்த அஜித்குமார் என்ற இளைஞரை திருட்டுப் புகாரில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற தனிப்படை போலீசார் கடுமையாகத் தாக்கியதில் மர... மேலும் பார்க்க