செய்திகள் :

விருதுநகர்: விடுமுறைக்கு வந்த மகன் - கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற தாயின் இரண்டாவது கணவர்

post image

விருதுநகர் அருகே காட்டுப்பகுதியில் வைத்து 6 வயது சிறுவனின் கழுத்தை அறுத்து, அப்படியே விட்டு வந்த தாயின் இரண்டாவது கணவர் செல்வத்தை விருதுநகர் மேற்கு காவல்நிலைய போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் ஏ.டி.பி காம்பவுண்ட் பகுதியை சேர்ந்தவர் மாரீஸ்வரி. இவருக்கு மருதுபாண்டி என்பவருடன் திருமணமாகி 6 வயதில் மகன் இருக்கிறார். கணவரைப் பிரிந்து தற்போது செல்வம் என்பவருடன் திருமணமாகி விருதுநகரில் வசித்து வந்தார். இவர்களுக்கு குழந்தை இல்லை. முதலாவது கணவருக்கு பிறந்த மகன் திருச்சுழி அருகே உள்ள இலுப்பையூரில் பெண்ணின் பெற்றோர் வீட்டில் தங்கி படித்து வருகிறார்.

சிதம்பர பாண்டியன்

பள்ளி விடுமுறைக்காகவும், திருவிழாவிற்காகவும் விருதுநகர் வந்த மகனை நேற்று காலை 10 மணிக்கு தனது இரண்டாவது கணவர் வெளியில் அழைத்து சென்றுள்ளார். வெகு நேரம் ஆகியும் திரும்பி வராததால் தாய் மாரீஸ்வரி, தனது மகனை காணவில்லை என பல இடங்களில் தேடிய போது இரண்டாவது கணவரும் உடனிருந்து தேடுவது போல நாடகமாடியுள்ளார்.

இதனிடையே, பந்தேனந்தல் அருகே சிறுவனை அழைத்துச் சென்ற செல்வம், சிறுவனை காட்டுப் பகுதியில் கழுத்தை அறுத்து, சத்தம் போட்டு விடக்கூடாது என்பதற்காக வாயில் பேனாவல் குத்தி அங்கேயே விட்டுவிட்டு வந்தது தெரிய வந்தது.

அப்போது சிறுவனின் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் சிறுவனை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனை தொடர்ந்து தாய் மாரீஸ்வரி அளித்த புகாரின் பேரில் மேற்கு காவல் நிலைய போலீசார் செல்வத்தை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

வேலூர்: தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவன் அடித்துக் கொலை - ஆண் நண்பனுடன் சிக்கிய மனைவி

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவுக்குஉட்பட்ட ஊனை வெங்கடசாமிரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளி தேவேந்திரன் (35). இவரின் காதல் மனைவி கலைவாணி (30). குடும்பத் தகராறு காரணமாக, சமீபத்தில்... மேலும் பார்க்க

மனைவியின் நோய்; கொன்றுவிட்டு மருத்துவமனை மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்த கணவன்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் கரக்குளம் ஹைஸ்கூல் ஜங்ஷன் பகுதியை சேர்ந்தவர் பாசுராங்கன்(73). இவரது மனைவி ஜெயந்தி(63). இவர்களுக்கு ரஞ்சித் என்ற மகனும், ரசனா என்ற மகளும் உள்ளனர். ரஞ்சித் வெளிநாட்டில் வேலை ... மேலும் பார்க்க

மதுரை: விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பட்டியலின இளைஞர்; கால்வாயிலிருந்து சடலமாக மீட்பு!

மடப்புரம் அஜித்குமாரைப் போல மதுரையைச் சேர்ந்த தினேஷ்குமார் என்ற இளைஞர் காவல்துறை சித்ரவதையால் கொலை செயப்பட்டுள்ளார் என்று உறவினர்களும் பல்வேறு அமைப்பினரும் மதுரையில் போராட்டம் நடத்தி வருவது, பரபரப்பை... மேலும் பார்க்க

கரூர் மரணங்கள்: தவெக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் கைது சிறப்பு புலனாய்வுக் குழு அதிரடி

கரூர் மாவட்டம் வேலுசாமிபுரம் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக விசாரிக்க சென்னை உய... மேலும் பார்க்க

கும்பகோணம்: கோயிலுக்கு வந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- 75 வயது அர்ச்சகர் போக்சோவில் கைது!

கும்பகோணம் அருகே உள்ள திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக... மேலும் பார்க்க

மின் இணைப்புக்கு ரூ.3,000 லஞ்சம்-மின்வாரிய ஆய்வாளரைக் கைது செய்த லஞ்ச ஒழிப்புத் துறை; விவரம் என்ன?

திருப்பூர் மாவட்டம், தாராபுரம்-பொள்ளாச்சி சாலையில் மின்வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் வணிக ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ஜெயகுமார் (56). இவரிடம் தாராபுரத்தை அடுத்த இச்சிப்பட்டி கிராமத்தைச் சேர... மேலும் பார்க்க