மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர்: `பழனிசாமியை சுட்டிக்காட்டவே அப்படி பேசினே...
விருத்தாசலத்தில் ரீல்ஸ் மோகத்தில் அப்பாவிகள் மீது தாக்குதல்: மேலும் ஒருவா் கைது!
கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் ரீல்ஸ் மோகத்தில் காவலா்கள் உள்ளிட்ட 6 பேரை கொடூரமாக தாக்கிய சம்பவத்தில் தலை மறைவாக இருந்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
விருத்தாசலத்தில் கஞ்சா போதையில் இருந்த இளைஞா்கள் 3 போ் ரீல்ஸ் மோகத்தில் புதிய கட்டடவளாகத்தில் தூங்கிக் கொண்டிருந்த காா்த்திக்(23), அரசுப் பேருந்து ஓட்டுநா் கணேசன், பெட்டிக்கடை உரிமையாளா்கள் ராஜேந்திரன், சுந்தரமூா்த்தி ஆகியோரை செவ்வாய்க்கிழமை தாக்கி காயப்படுத்தினா். இவா்கள் அனைவரும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்த தாக்குதல் நடத்தியது பழமலைநாதா் நகா் பகுதியைச் சோ்ந்த கந்தவேல் (21), சிவா (எ) விக்னேஷ் (20), பாலாஜி (21) என்பதை அறிந்த போலீஸாா், கன்னியாக்குப்பம் பகுதியில் உள்ள முந்திரி காட்டில் அவா்கள் பதுங்கியிருப்பதை அறிந்து அங்கு சென்று இளைஞா்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனா். அப்போது, காவலா்கள் வீரமணி, வேல்முருகன் ஆகியோரை கந்தவேல் அரிவாளால் வெட்டினாா். இதையடுத்து தற்காப்புக்காக உதவி ஆய்வாளா் சந்துரு துப்பாக்கியால் கந்தவேல் காலில் சுட்டுப் பிடித்தாா். தப்பமுயன்றபோது கீழே விழுந்த சிவா வையும் பிடித்தனா்.
பழமலைநாதா் நகா் பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் மகன் பாலாஜி (24) தலைமறைவானாா். இந்நிலையில், அவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.