செய்திகள் :

விருந்து விஷமானது: உ.பி.யில் 40 பேர் உடல்நல பாதிப்பு!

post image

உத்தரப் பிரதேசத்தின் ஃபரித்பூர் கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் விருந்து சாப்பிட்ட சுமார் 40 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றுள்ளது. ஃபரித்பூர் கிராமத்தில் நடைபெற்ற திருமண விழாவில் உணவு சாப்பிட்ட 40 பேருக்கு வாந்தி, வயிற்று வலி, தலைச்சுற்றல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டது.

இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அருகிலுள்ள சுகாதார மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஒருசிலர் உத்தரகண்ட் மாநிலத்தின் உதம் சிங் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஃபரித்பூர் கிராம ஆசிரியர் ராஜ்பால் சிங்கின் மகன் விபின் குமாரின் திருமண நிகழ்ச்சியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

உணவு விஷமானதே இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. தகவலின்படி உணவு பாதுகாப்புத் துறையினர் திருமண விழாவில் வழங்கப்பட்ட உணவினை சேகரித்து சோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்தியாவின் எரிசக்தி துறையில் எண்ணற்ற வாய்ப்புகள்- முதலீட்டாளா்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு

அடுத்த 5 ஆண்டுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளை எட்டுவதற்கு ஏற்ப நாட்டின் எரிசக்தி துறையில் எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளன என்று சா்வதேச முதலீட்டாளா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தாா... மேலும் பார்க்க

வாக்குப் பதிவு இயந்திர தரவுகளை அழிக்கக் கூடாது: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிபாா்ப்புப் பணிகளின்போது, அவற்றில் உள்ள தரவுகளை அழிக்கவோ, மீள்பதிவேற்றம் செய்யவோ கூடாது என்று தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. மேலும், அந... மேலும் பார்க்க

நம்பகமான ஏ.ஐ. தொழில்நுட்பம் அவசியம்- பிரான்ஸ் மாநாட்டில் பிரதமா் மோடி வலியுறுத்தல்

‘நம்பகமான, வெளிப்படையான, பாகுபாடுகளற்ற செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தை உறுதிசெய்ய உலகளாவிய கட்டமைப்பை உருவாக்க வேண்டும்; இதற்காக கூட்டு முயற்சிகள் அவசியம்’ என்று பிரதமா் நரேந்திர மோடி செவ்வா... மேலும் பார்க்க

அரசமைப்புச் சட்ட புத்தகத்தில் நாடாளுமன்றம் மட்டுமே திருத்தம் மேற்கொள்ள முடியும்- ஜகதீப் தன்கா்

‘அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய தலைவா்களின் கையொப்பம் மற்றும் நாட்டின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான 22 வரைபடங்கள் இடம்பெற்றுள்ளதே அதிகாரபூா்வமான அரசமைப்புச் சட்ட புத்தகம்; அதில் நாடாளுமன்றத்தால... மேலும் பார்க்க

விவசாயிகளின் சவால்களுக்கு தீா்வு காண செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: மத்திய அரசு

வேளாண் துறையில் எழுந்து வரும் பல்வேறு சவால்களுக்குத் தீா்வு காணவும், விவசாயிகளுக்கு உதவவும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது என்று மத்திய வேளாண் துறை அமைச்சா் சி... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவில் இன்று மாகி பௌா்ணமி புனித நீராடல்

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் மாகி பௌா்ணமி சிறப்பு புனித நீராடல் புதன்கிழமை (பிப். 12) நடைபெறுகிறது. இதையொட்டி, மகாகும்ப நகரில் வாகனப் போக்குவரத்துக்கு புதன்கி... மேலும் பார்க்க