இந்தியாவின் நதி நீர் இனி நமது நாட்டுக்காக பயன்படுத்தப்படும்: பிரதமர் மோடி
விரைவில் விற்பனைக்கு வரும் டாடா ஆல்ட்ரோஸ் 2025!
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் மேம்படுத்தப்பட்ட ஆல்ட்ரோஸ் 2025 மாடல் காரின் டீசரை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஏற்கெனவே சந்தையில் உள்ள டாடா ஆல்ட்ரோஸ் மாடல் காரின் அடுத்த வெர்சனான ஆல்ட்ரோஸ் ஃபேஸ்லிஃப்ட் 2025 காரின் முதல் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில், தற்போது இரண்டாவது டீசர் வெளியாகியுள்ளது.
முதல் டீசரில் காரின் வெளிப்புற வடிவமைப்பும் இரண்டாவது டீசரில் காரின் உட்புற வடிவமைப்பும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய மாடலில் மேம்படுத்தப்பட்ட டேஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. சன் ரூஃப், 360 டிகிரி கேமிரா, முன்பைவிட பெரிய டிஆர்எல் விளக்குகள் என பல்வேறு புதிய அம்சங்களுடன் காணப்படுகிறது.
வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியில் மேம்படுத்தப்பட்டாலும், என்ஜினை பொறுத்தவரை பழைய ஆல்ட்ரோஸில் இருந்து எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இரட்டை சிஎன்ஜி சிலிண்டர் ஆப்சனுடனும் கிடைக்கிறது.
விலையை பொறுத்தவரை இறுதியாக அறிமுகம் செய்யப்பட்ட ஆல்ட்ரோஸ் ரூ. 6.65 லட்சம் முதல் ரூ. 11.30 லட்சம் (எக்ஸ் சோரூம்) வரை விற்கப்படுகிறது.
இந்த நிலையில், ஆல்ட்ரோஸ் ஃபேஸ்லிஃப்ட் தொடக்க விலை ரூ. 6.85 லட்சமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகின்ற மே 21 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.