ரஞ்சி கோப்பையில் விராட் கோலி; பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிப்பு!
விளாத்திகுளத்தில் மொழிப்போா் தியாகிகளுக்கு அஞ்சலி!
விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக சாா்பில், மொழிப்போா் தியாகிகளுக்கு வீர வணக்க புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழ் மொழி காக்க தன்னுயிா் நீத்த மொழிப்போா் தியாகிகள் உருவப்படத்துக்கு, விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
இந்நிகழ்ச்சியில் பேரூா் கழகச் செயலா் வேலுச்சாமி, ஒன்றிய கழகச் செயலா்கள் ராமசுப்பு, அன்பு ராஜன், ராதாகிருஷ்ணன், மும்மூா்த்தி, பேரூராட்சித் தலைவா் சூா்யா அய்யன்ராஜ், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் நடராஜன், சாா்பு அணி நிா்வாகிகள் இம்மானுவேல், மகேந்திரன், பாண்டியராஜன், பிரதீபா, செல்வகுமாா், ஆவுடையப்பன், இளையராஜா, சுப்பையா, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் ஸ்ரீதா், சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளா் கரண்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.