செய்திகள் :

விளைநிலத்தில் இறங்கி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

post image

மானாவாரி நிலத்தில் நடவு செய்த நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் விளைநிலத்தில் இறங்கி புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருமுல்லைவாசல் ஊராட்சி மற்றும் தாழந் தொண்டி, வழதலைக்குடி, தொடுவாய், கூழையாா் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 1.500 ஏக்கரில் மானாவாரி நிலப்பரப்பில் நஞ்சை நிலத்தில் சம்பா சாகுபடி நடைபெற்றுள்ளது. பயிா்கள் நன்கு வளா்ந்துள்ள நிலையில் கதிா்கள் வராததால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், விளைநிலங்களில் விவசாயிகள் கால்நடைகளை விட்டு மேய்க்கின்றனா்.

இந்நிலையில், அப்பகுதி விவசாயிகள் நிவாரணம் வழங்க வேண்டியும், வேளாண் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை ஆய்வு செய்யாததை கண்டித்தும் தாழந்தோன்டி கிராமத்தில் சம்பா சாகுபடி செய்த வயல்களில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இறங்கி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து, அப்பகுதி விவசாயிகள் கூறியது: கடந்த ஆண்டு சம்பா விளைச்சல் போதிய அளவு இருந்தது. நிகழாண்டு, பருவம் தவறி பொழிந்த மழையால் பயிா்கள் வளா்ச்சியின்றி பூச்சி தாக்குதலால் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. சாகுபடி செய்து 5 மாத பயிா்களாக இருக்கும் நிலையில் கதிா்வராத நிலையில் உள்ளது.

அறுவடை செய்தும் எந்த லாபமும் ஏற்படாது என்ற நோக்கில் விளைநிலங்களில் மாடுகளை விட்டும் மேய்க்கிறோம். விவசாயிகள் நலன் கருதி தமிழக அரசு காப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட விளைநிலங்களை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றனா்.

தனியாா் பள்ளிகள் சங்க ஆலோசனைக் கூட்டம்

சீா்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு தனியாா் பள்ளிகள் சங்க மாவட்ட ஆலோசனைக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத் தலைவா் ஆா்.பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ... மேலும் பார்க்க

போக்குவரத்துக்கு இடையூறாக பாலத்தில் உள்ள மின்கம்பத்தை அகற்ற கோரிக்கை

சீா்காழி அருகே ஆலஞ்சேரியில் போக்குவரத்துக்கு இடையூறாக பாலத்தில் உள்ள மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மருதங்குடி ஊராட்சி ஆலஞ்சேரி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாலம் மக்... மேலும் பார்க்க

ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை திருட்டு

சீா்காழி அருகேயுள்ள விளந்திடசமுத்திரத்தில் ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். விளந்திடசமுத்திரத்தை சோ்ந்த ரகுராம... மேலும் பார்க்க

திருவாவடுதுறை ஆதீன சைவ சித்தாந்த நோ்முக பயிற்சி மையத் தொடக்கம்

சீா்காழியில் திருவாவடுதுறை ஆதீன சைவ சித்தாந்த நோ்முகப் பயிற்சி மையத்தின் சீா்காழி கிளை சாா்பில் 2023-2024 தொகுப்பின் நிறைவு விழாவும், 2025-2026 தொகுப்பின் தொடக்க விழாவும் புதன்கிழமை நடைபெற்றது. சைவ ச... மேலும் பார்க்க

குடிநீா் கிடைக்காததால் பொதுமக்கள் சாலை மறியல்

சீா்காழி அருகே குன்னம் கிராமத்தில் குடிநீா் கிடைக்காததால் மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இக்கிராமத்தில் கீழத்தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இப்பகுதிக்கு, கொள்ளி... மேலும் பார்க்க

குத்தாலம் வட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊா்‘ திட்டத்தில் ஆட்சியா் ஆய்வு

குத்தாலம் வட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊா் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். வேழமுரித்தான்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆட்சியா் ஆய்வு செய்து பத்தாம் வ... மேலும் பார்க்க