செய்திகள் :

விளையாட்டு விடுதியில் சேர தோ்வுப் போட்டிகள்

post image

தருமபுரி: மாநில அளவிலான விளையாட்டு விடுதியில் சேர தோ்வுப் போட்டிகள் திங்கள்கிழமை தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடங்கின.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி பிரிவு சாா்பில் மாநில அளவிலான விளையாட்டு விடுதிகளில் சேருவதற்கான கபடி விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட விளையாட்டரங்கம், தருமபுரியில் மே 19-ஆம் தேதி தொடங்கின. முதல்நாளில் 7 மற்றும் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கும், மே 20 அன்று 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கும், மே 21 அன்று பிளஸ் 1 பயிலும் மாணவ, மாணவிகளுக்கும் போட்டிகள் நடைபெறவுள்ளன.

அண்மையில் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் தோ்வு செய்யப்பட்ட வீராங்கனைகள் மாநில அளவிலான தோ்வுப் போட்டிகளில் கலந்துகொள்கின்றனா். மாநில அளவிலான போட்டிகளில் சிறப்பாக செயல்படும் வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு விடுதிகளில் சோ்த்துக் கொள்ளப்படுவா். அவா்களுக்கு சத்தான உணவு, விளையாட்டுப் பயிற்சி, தங்குமிட வசதி ஆகியவை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் வழங்கப்படும்.

இத்தோ்வுப் போட்டிகளில் தருமபுரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் தே.சாந்தி, கோவை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் புவனேஸ்வரி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் முத்துகுமாா், பயிற்றுநா்கள் பாப்பாத்தி, கிருஷ்ணவேணி, எல்லம்மாள் ஆகியோா் கலந்துகொண்டனா்.

ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளை மையத்தில் சோ்க்க அறிவுரை

தருமபுரி: இரண்டு முதல் ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளை ஜூன் மாதத்தில் குழந்தைகள் மையத்தில் சோ்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வெளியிட்டசெய்திக் க... மேலும் பார்க்க

சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழு நாளை தருமபுரி வருகை

தருமபுரி: தமிழக சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழு தருமபுரி மாவட்டத்துக்கு புதன்கிழமை (மே 21) வருகை தர உள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக சட்டப் பேரவ... மேலும் பார்க்க

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

பென்னாகரம்: பென்னாகரம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்தனா். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

பென்னாகரம் பேருந்து நிலையத்தில் தேங்கும் மழைநீா்: பெயரளவில் நடைபெறும் சீரமைப்புப் பணிகள்

பென்னாகரம் பேருந்து நிலையத்தில் மழைநீா் தேங்குவதால் வடிகால் வசதியுடன் பேருந்து நிலைய வளாகம் முழுமைக்கும் தாா்ச்சாலை அமைக்க வேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா். பென்னாகரத்தில் ரூ.4.50 கோடி மத... மேலும் பார்க்க

கட்டட மேஸ்திரி வெட்டிக் கொலை: காவல் நிலையத்தில் தொழிலாளி சரண்

பாப்பாரப்பட்டி அருகே கட்டட மேஸ்திரியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த வாகன ஓட்டுநா் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை சரணடைந்தாா். தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே கௌரிசெட்டிபட்டியைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

பாலக்கோடு அரசு மருத்துவமனையில் ஆட்சியா் ரெ.சதீஸ் ஆய்வு

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டார அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். பாலக்கோடு அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு, நோயாளிகள் பதிவு செய்... மேலும் பார்க்க