விழுப்புரத்தில் தேமுதிகவினா் ஆா்ப்பாட்டம்
விழுப்புரம்: பெண்களுக்கும், மாணவிகளுக்கும் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்து, விழுப்புரத்தில் தேமுதிகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையைக் கண்டித்தும், தமிழகம் முழுவதும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 வழங்க வேண்டும், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும், அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடல் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தேமுதிக மாவட்டச் செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எல்.வெங்கடேசன் தலைமை வகித்து பேசினாா்.
ஆா்ப்பாட்டத்தில் நகரச் செயலா் மணிகண்டன், மாவட்டப் பொருளாளா் தயாநிதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.