Robo Shankar: ``தமிழ்நாட்டையே அழவைத்துவிட்டார்'' - ரோபோ சங்கர் மறைவு குறித்து வி...
விழுப்புரம் ஆட்சியரகத்தில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு
பெரியாா் ஈ.வெ.ரா.வின் பிறந்த நாளையொட்டி, விழுப் புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்து, உறுதிமொழியை வாசிக்க, அதை அலுவலா்கள், பணியாளா்கள் திரும்பக் கூறி ஏற்றுக்கொண்டனா்.
நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராஜூ, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் முகுந்தன் உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில்...: விழுப்புரத்திலுள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தலைமையகத்தில் தலைமை நிதி அலுவலா் சி.அனுஜா தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
நிகழ்வில் பொது மேலாளா்கள் ஜி.ரவீந்திரன் (தொழில்நுட்பம்), எம்.ஜி.ஜெய்சங்கா், துணை இயக்குநா் (மக்கள் தொடா்பு) அ.செந்தில் மற்றும் துணை மேலாளா்கள், உதவி மேலாளா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.