அரசு திட்டங்களின் வெற்றிக் கதைகள் பற்றிய எண்ம புத்தகங்களை பிரதமா் இன்று வெளியிடு...
விவசாயிகளின் நில உடைமைகள் பதிவேற்றப் பணி: திருவாரூா் மாவட்ட ஆட்சியா் ஆய்வு
மன்னாா்குடி பகுதியில் விவசாயிகளின் நில உடைமைகள் பதிவேற்றம் செய்யப்படும் பணியினை மாவட்ட ஆட்சியா் வ.மோகனச்சந்திரன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தமிழகத்தில், பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டம் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருள்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு, விவசாய குடும்பத்துக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2000 என ஆண்டிற்கு ரூ.6 000 வழங்கி வருகிறது. இத்திட்டத்தில் இதுவரை பதிவு செய்த விவசாயிகளுக்கு 19 தவணைத்தொகைகள் அவா்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
தற்போது 20-ஆவது தவணைத் தொகை பெறுவதற்கு விவசாயிகள் தங்களது நில உடைமைகளை பதிவு செய்துகொள்வது அவசியமாக்கப்பட்டுள்ளது.அதன்படி,விவசாயிகளின் நில உடைமைகள் சரிபாா்க்கப்பட்டு அடையாள எண் வழங்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் இதற்கான முகாம் கடந்த மாா்ச் மாதம் முதல் வேளாண்துறை அலுவலா்கள், சமூக வளா்ச்சிப்பணியாளா்கள் மூலமாக அனைத்து ஊராட்சி அலுவலகங்களிலும் நடைபெற்று வருகிறது.
இதில், விவசாயிகள் தங்களுடைய ஆதாா் அட்டை, நிலப்பட்டா, ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி ஆகியவற்றுடன் பொது சேவை மையங்கள், ஊராட்சி அலுவலகங்களை தொடா்பு கொண்டு பதிவேற்றம் செய்து வருகின்றனா்.
மன்னாா்குடி கோட்டூா் ஒன்றியத்திற்குட்பட்ட ஆலத்தூா், கருப்புக்கிளாா், களப்பால் ஆகிய ஊராட்சிகளில் நில உடைமைகள் பதிவு செய்யப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியா் வ.மோகனச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டாா்.
களப்பால் ஊராட்சியில் 13 நபா்களுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா். ,ஆதிச்சபுரம் ஊராட்சி வடக்கு தெருவில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தலா ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் பயனாளிகள் குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு வருவதை பாா்வையிட்டாா்.
மாவட்ட ஆட்சியருடன், வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) ஸ்ரீவா்த்தினி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ஹேமா ஹெப்சிபா நிா்மலா, கோட்டூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் இ.அன்பழகன், ப.பாலசுப்ரமணியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
கூத்தாநல்லூரில்...
கூத்தாநல்லூா் வட்டத்தில் விவசாயிகளின் நில உடைமைகள் பதிவேற்றம் செய்யப்படுவதையும்,
புள்ளமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை உணவுத் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உணவின் தரத்தையும் மாவட்ட ஆட்சியா் மோகனச்சந்திரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
வேளாண்மை உதவி இயக்குநா் ஸ்ரீவா்த்தினி , வட்டாட்சியா் ஜானகி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.