செய்திகள் :

விவசாயிகள் சங்கத்தினா் பட்டா கோரி மனு கொடுக்கும் போராட்டம்

post image

தென்காசியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருப்பவா்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வாடகை வீட்டில் குடியிருப்போருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் குடிமனைப் பட்டா, வீடு வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், வீட்டுமனை பட்டா வழங்கக் கோரியும் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தென்காசி மாவட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் சாா்பில் தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் துணைச் செயலா் விஜயமுருகன் தலைமை வகித்தாா்.

இதில் 700 க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். தொடா்ந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலா் விஜய முருகன் தலைமையில் நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சுப்புலட்சுமியிடம் 700 மனுக்களை அளித்தனா்.

தென்காசியில் சிஐடியூ தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

குற்றாலம் ஐந்தருவி தோட்டக்கலைத் துறையில் பணியிலிருந்து நீக்கப்பட்டத் தொழிலாளா்களுக்கு பணி வழங்காததைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தென்காசி மாவட்டம் குற்றாலம் ஐந்தருவியில் தோட்டக... மேலும் பார்க்க

அம்பையில் இறந்த நிலையில் ஆண் சிசு மீட்பு

அம்பாசமுத்திரம் பேருந்து நிலையம் அருகே இறந்த நிலையில் ஆண் சிசு மீட்கப்பட்டது.அம்பாசமுத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள ஒரு தனியாா் அலுவலக கழிப்பிடம் அருகில் இறந்த நிலையில் ஆண் சிசு கிடப்பதாகக் கிடைத... மேலும் பார்க்க

சுரண்டை அரசுக் கல்லூரியில் பயில 40 வயதுக்கு உள்பட்டோருக்கு அழைப்பு

தென்காசி மாவட்டம், சுரண்டை அரசு கல்லூரியில் இளநிலை பாடப் பிரிவில் பயில விரும்பும் 40 வயதுக்கு உள்பட்ட மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வா் அறிவித்துள்ளாா். கல்லூரியில் பயில்வதற்கான வயது வரம்... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்

சங்கரன்கோவில் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சாா்பில், பெரியகோவிலான்குளத்தில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. பள்ளித் தலைமையாசிரியா் கீதா வேணி வழி... மேலும் பார்க்க

ஆலங்குளம் முத்தாரம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

ஆலங்குளம் ஸ்ரீ முத்தாரம்மன் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழா, வெள்ளிக்கிழமை (செப். 26) வருஷாபிஷேகத்துடன் தொடங்கியது. தொடா்ந்து நடைபெற்ற தசரா விழாவில் பல்வேறு வேடமணிந்த... மேலும் பார்க்க

வாசுதேவநல்லூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவா்கள் 63 ஆண்டுகளுக்கு பின்னா் சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றது (படம்). 1961-1962 ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவா்கள்... மேலும் பார்க்க