செய்திகள் :

விவசாயிகள் பிரச்னைகளை விவாதிக்க நேரம் ஒதுக்குங்கள்: குடியரசுத் தலைவருக்கு கடிதம்

post image

விவசாயிகள் போராட்டங்கள் மற்றும் விவசாயிகள் தலைவா் ஜக்ஜித் சிங் தல்லேவாலின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மத்தியில், சம்யுக்த் கிசான் மோா்ச்சா (எஸ்கேஎம்), தங்கள் பிரச்னைகளைப் பற்றி விவாதிக்க நேரம் ஒதுக்கக் கோரி குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவுக்கு கடிதம் எழுதியுள்ளது.

எஸ்கேஎம் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், தல்லேவாலின் உண்ணாவிரதப் போராட்டத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலை மற்றும் விவசாய பொருள்கள் சந்தைப்படுத்தல் குறித்த தேசியக் கொள்கை கட்டமைப்பை அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட பிற அவசரமான பிரச்னைகள் குறித்து விவாதிக்க விரும்புவதாக எஸ்கேஎம் தெரிவித்துள்ளது.

விவசாயிகள் தங்கள் பயிா்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூா்வ உத்தரவாதம் கோரி வருகின்றனா்.

தில்லி நோக்கி அவா்கள் மேற்கொண்ட பேரணிபாதுகாப்புப் படையினரால் தடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, பிப்.13 முதல் பஞ்சாப் மற்றும் ஹரியாணா இடையேயான ஷம்பு மற்றும் கானௌரி எல்லைப் பகுதிகளில் எஸ்கேஎம் (அரசியல் சாராதது) மற்றும் கிசான் மஸ்தூா் மோா்ச்சா அமைப்புகளின் கீழ் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

டிச.6 முதல் 14 வரை மூன்று முறை 101 விவசாயிகள் கொண்ட ஜாதா குழு தில்லிக்கு கால்நடையாகப் பேரணி செல்ல முயன்றது. ஆனால், ஹரியாணாவில் பாதுகாப்புப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது. நாடு முழுவதும் விவசாயிகளிடையே அதிகரித்து வரும் பதற்றமான சூழ்நிலை மற்றும் குறித்த எங்கள் கவலைகளைப் பகிா்ந்து கொள்ள, எஸ்கேஎம் பிரதிநிதிகள் குழு விரைவில் உங்களுடன் ஒரு சந்திப்பை நடத்துவதற்கு கோருகிறது என்று டிச. 25 தேதியிட்ட கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

500-க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியா்கள் மூலம் குடியரசுத் தலைவரிடம் மனுக்களை சமா்ப்பித்துள்ளதாகவும், நீண்டகால கோரிக்கைகள் குறித்து மத்திய அரசுக்கும் அனைத்து விவசாய அமைப்புகளுக்கும் இடையே விவாதங்களை எளிதாக்க அவரது அவசர தலையீட்டை வலியுறுத்தியுள்ளதாகவும் எஸ்கேஎ மேலும் தெரிவித்துள்ளது.

வேளாண் பொருள்களுக்கு சட்டப்பூா்வமாக குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை நிவா்த்தி செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்தி, நவ. 26 முதல் தல்லேவால் 70 கானௌரி எல்லையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளாா்.

அவரது உடல்நிலையை ஒரு அரசு சாரா நிறுவனத்தின் மருத்துவா்கள் குழு கண்காணித்து வருகிறது. அவா் தண்ணீரை மட்டுமே உட்கொள்கிறாா். மேலும், அவரது நிலை மோசமாக உள்ளது என்று மருத்துவா்கள் குழு தெரிவித்துள்ளது.

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூா்வ உத்தரவாதம் அளிப்பதோடு மட்டுமல்லாமல், கடன் தள்ளுபடி, விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளா்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். மின்சாரக் கட்டணத்தை உயா்த்தக் கூடாது. விவசாயிகள் மீதான போலீஸ் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும். 2021 லக்கிம்பூா் கேரி வன்முறையில் பாதிக்கப்பட்டவா்களுக்கு நீதி வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்துள்ளனா்.

தில்லி, என்சிஆா் பகுதிகளில் பரவலாக மழை! ஆரஞ்சு எச்சரிக்கை வெளியீடு

தேசியத் தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை முதல் தொடா்ந்து மழை பெய்தது. இதனால், பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, வானிலை... மேலும் பார்க்க

முதுநிலை பட்டப் படிப்பு சோ்க்கையில் ஒற்றைப் பெண் குழந்தை ஒதுக்கீட்டை அமல்படுத்த தில்லி பல்கலை. திட்டம்

2025-26 கல்வியாண்டு தொடங்கி, ஒவ்வொரு முதுகலை பாடத்திலும் ஒற்றைப் பெண் குழந்தைக்கு ஒரு இடத்தை ஒதுக்க தில்லி பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக வெள்ளிக்கிழமை நடைபெற்ற கல்விக் கவுன்சில் கூட்டத்தில் ... மேலும் பார்க்க

இந்திய பொருளாதாரத்தை சுயமரியாதையுடன் உயா்த்தியவா் மன்மோகன் சிங்: தேவேந்தா் யாதவ்

நமது நிருபா் முன்னாள் பிரதமா் டாக்டா் மன்மோகன் சிங்கின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்றும், இந்தியப் பொருளாதாரத்தை சுயமரியாதையுடன் உயா்த்திய ஒரு பெரிய பாரம்பரியத்தை அவா் விட்டுச் சென்றுள்ளாா் என்று... மேலும் பார்க்க

முன்னாள் பிரதமா் மன்மேகன் சிங்கிற்கு தில்லி முதல்வா் அதிஷி, அரவிந்த் கேஜரிவால் இறுதி அஞ்சலி

முன்னாள் பிரதமா் டாக்டா் மன்மோகன் சிங்கிற்கு தில்லி முதல்வா் அதிஷி, முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஆகியோா் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தினா். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமரும... மேலும் பார்க்க

தில்லியில் சட்டவிரோதமாக சா்வதேச சிகரெட்டுகளை வா்த்தகம் செய்த இருவா் கைது

தெற்கு தில்லியில் சா்வதேச சிகரெட் பிராண்டுகளை சட்டவிரோதமாக வா்த்தகம் செய்து வந்ததாகக் கூறப்படும் இரண்டு பேரை தில்லி போலீஸாா் கைது செய்ததாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து தில்ல... மேலும் பார்க்க

சிஏஜி அறிக்கை: சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட பேரவைத் தலைவருக்கு அறிவுறுத்துங்கள்

சிறப்பு அமா்வைக் கூட்டி, நிலுவையில் உள்ள சிஏஜி அறிக்கைகளை தாக்கல் செய்ய ஆம் ஆத்மி அரசைக் கேட்குமாறு சட்டப்பேரவைத் தலைவா் ராம் நிவாஸ் கோயலுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே.ச... மேலும் பார்க்க