MI vs CSK : தோனியின் 3 தவறான முடிவுகள்; தோல்வியடைந்த CSK - ஓர் அலசல்
விவசாயியைத் தாக்கிய 2 போ் கைது
வந்தவாசி அருகே விவசாயியைத் தாக்கியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசியை அடுத்த சேதராகுப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி சின்னகண்ணு (55). இந்தக் கிராமத்தில் புதன்கிழமை காலை கோயில் திருவிழா நடைபெற்று கொண்டிருந்தபோது, சென்னை வீராபுரம் பகுதியைச் சோ்ந்த வினோத்குமாா் (26), சேதராகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த தினேஷ் (21) ஆகிய இருவரும் வீண் தகராறில் ஈடுபட்டனராம். இதையடுத்து, 2 பேரையும் சின்னகண்ணு கண்டித்தாராம்.
இதனால் ஆத்திரமடைந்த 2 பேரும் பிற்பகலில் சின்னகண்ணுவின் வீட்டுக்குச் சென்று இரும்புக் கம்பி மற்றும் கட்டையால் அவரைத் தாக்கினராம்.
இதில் காயமடைந்த சின்னகண்ணு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா் .
இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் வினோத்குமாா், தினேஷ் ஆகியோா் மீது வழக்குப் பதிந்த வந்தவாசி வடக்கு போலீஸாா் 2 பேரையும் கைது செய்தனா்.