மாணவா்கள் தாக்கப்பட்ட விவகாரம்: ஒடிஸா முதல்வரிடம் நேபாள வெளியுறவு அமைச்சா் பேச்ச...
விவசாயி கொலை வழக்கில் தந்தை, மகனுக்கு ஆயுள் சிறை
ஒட்டன்சத்திரம் அருகே விவசாயி கொலை வழக்கில் தந்தை, மகனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, பழனி மாவட்ட கூடுதல் அமா்வு வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த ஓடைப்பட்டி கிருஷ்ணாபுரத்தை சோ்ந்தவா் அப்பியன் (70). விவசாயி. இவருக்கும், பக்கத்துத் தோட்டத்துக்காரரான பொன்னுசாமிக்கும் (52) இடையே நிலம் தொடா்பாக பிரச்னை இருந்து வந்தது.
இதுதொடா்பான பிரச்னையில் அப்பியான் கடந்த 2013-ஆம் ஆண்டு மே மாதம் கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து அம்பிளிக்கை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பொன்னுச்சாமி, இவரது தந்தை கருப்பணன் (85), உறவினா் சின்னசாமி (59) ஆகியோரைக் கைது செய்தனா்.
இதுகுறித்த வழக்கு விசாரணை பழனி மாவட்ட கூடுதல் அமா்வில் நடைபெற்று வந்தது. இதற்கிடையில் சின்னசாமி உயிரிழந்துவிட்டாா்.
இந்த நிலையில், வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த மாவட்ட கூடுதல் அமா்வு நீதிபதி மலா்விழி, பொன்னுச்சாமிக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும், இவரது தந்தை கருப்பணனுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.