செய்திகள் :

விவசாய குறைதீர்க் கூட்டத்துக்கு மட்டம்போடும் அதிகாரிகள்; `எங்களுடன் வருவரா முதல்வர் மு.க.ஸ்டாலின்?!’

post image

அனைவருக்கும் பசுமை வணக்கம்..!

‘விருத்தாசலம் கோட்ட விவசாயிகள் குறைதீர்க் கூட்டத்தில், கோட்டத்தின் தலைவரான ஆர்.டி.ஓ உள்ளிட்ட அதிகாரிகளே பங்கேற்காததால் அதிருப்தியடைந்த விவசாயிகள், கூட்டத்தைப் புறக்கணித்தனர்.’

‘திருப்பூர் வருவாய் கோட்ட அளவில் கடமைக்காக மட்டுமே குறைதீர்க் கூட்டம் நடத்தப்படுவதால், விவசாயிகள் வேதனை.’

மேற்கண்ட இரண்டு செய்திகளும் தமிழகம் முழுவதும் காலகாலமாக நடத்தப்பட்டு வரும் விவசாயிகள் குறைதீர்க் கூட்டங்களுக்கு இரண்டு சோறு பதம்.

‘எது வேண்டுமானாலும் காத்திருக்கலாம்... ஆனால், விவசாயம் காத்திருக்கக் கூடாது’ என்று இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறிப்பிட்டதாகச் சொல்வார்கள்.

இந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த விவசாயம் மற்றும் விவசாயிகளுக்காகப் பல்வேறு திட்டங்கள் தீட்டப்படுகின்றன. அவையெல்லாம் உரிய வகையில் விவசாயிகளுக்கு உதவுகின்றனவா... வேறென்னென்ன தேவைகள் இருக்கின்றன என்பதையெல்லாம் அரசாங்கம் தெரிந்துகொள்ளத்தான், மாவட்டம்தோறும் விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் என்பதே உருவாக்கப்பட்டது. இதில், வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை எனப் பல்துறை அதிகாரிகளும் கலந்துகொள்ள வேண்டும் என்பது விதி.

மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம் நடத்தப்பட வேண்டும். அவர் இல்லையென்றால் துணை ஆட்சியர் நடத்துவார். சில சமயங்களில் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறும். தாசில்தார், வருவாய் ஆய்வாளர், வேளாண் இணை இயக்குநர் என மாவட்ட அளவில் முடிவுகள் எடுக்கும் அதிகாரம் உள்ள, துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும். ஆனால், கூட்டத்தில் பங்கேற்காமல் மட்டம் போடுபவர்கள்தான் இவர்களில் அதிகம். கோட்ட அளவிலான பிரச்னைகளை, மாவட்ட குறைதீர்க் கூட்டங்களுக்குக் கொண்டுவராமல், கோட்ட அளவிலேயே தீர்த்து வைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்களிலும் இதே கொடுமையே!

திருப்பூரில் 45 அதிகாரிகள் கலந்துகொள்ள வேண்டிய கூட்டத்தில் 18 அதிகாரிகள்தான் கலந்துகொண்டனர். அவர்களில் பலரும், முடிவுகள் எடுக்கும் அதிகாரம் ஏதுமற்ற அடுத்த நிலை அலுவலர்கள்தான்.

தங்களின் குறைகளைத் தீர்த்துக்கொள்ளத்தான், அன்றாட வேலைகளையெல்லாம் முன்கூட்டியே முடித்துவிட்டு, கைகளில் மனுவோடு இத்தகைய கூட்டங்களில் குவிகிறார்கள் விவசாயிகள்.

அதிகாரிகளுக்கு ஆயிரம் வேலைகள் இருக்கலாம். ஆனால், எல்லாவற்றையும்விட முதன்மையானது விவசாயம் என்பதை உணர மறுப்பது, நாட்டின் சாபக்கேடு. பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டியது அதிகாரிகளின் கடமை. ஆனால், அப்படி நடப்பதே இல்லை என்பதே கடைந்தெடுத்த உண்மை.

“இப்போது, ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்று புறப்பட்டிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒரு தடவை... ஒரே ஒரு தடவை விவசாயிகள் குறைதீர்க் கூட்டத்துக்குச் சென்று நேரடியாக ஆய்வு நடத்தி ‘எங்களுடன் ஸ்டாலின்’ என நிற்பாரா?” என ஏங்குகிறார்கள் விவசாயிகள்.

அவர்கள் வைக்கும் ஒரே ஒரு வேண்டுகோள்... வழக்கம்போல ‘செட்’ போடாமல் அதிரடியாக வர வேண்டும் என்பதுதான்.

நடக்குமா?

- ஆசிரியர்

பசுமை சந்தை

விற்க விரும்புகிறேன்கே.எஸ்.கணேசன்,கும்பகோணம்,தஞ்சாவூர்.93443 00656இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட தூயமல்லி, கிச்சிலிச் சம்பா, பொன்னி, கறுப்புக் கவுனி, நவரா, பூங்கார், காட்டுயானம் அரிசி மற்றும் அவல... மேலும் பார்க்க

`ஒரு குவிண்டால் வெங்காயத்திற்கு ரூ.350 மானியம்!'- மகாராஷ்டிரா அரசு முடிவு!

இந்தியாவில் மகாராஷ்டிராவில் அதிக அளவு வெங்காயம் விளைகிறது. கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் அடுத்த இரண்டு இடங்களில் இருக்கிறது. ஆனால் அடிக்கடி வெங்காய விலை குறைந்து விவசாயிகள் பாதிக்கப்படுகின்... மேலும் பார்க்க

1 டன் உயிர்க்கரி ரூ.12,000... 1 டன் உயிர் நிலக்கரி ரூ.15,000... மரக் கழிவுகளிலிருந்து தாராள வருமானம்

தொடர்வேளாண் காடுகளில் வளர்ப்பதற்கு ஏற்ற, தடசு மரத்தின் தனிச்சிறப்புகள், சாகுபடி தொழில்நுட்பம் மற்றும் விற்பனை வாய்ப்புகள் குறித்து கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். மரங்களின் கழிவுகளிலிருந்து, ‘பயோ சார... மேலும் பார்க்க

ஒரே குளத்தில் ஊறிய எடப்பாடியும் ஸ்டாலினும்... வீணாகிக்கொண்டே இருக்கும் நெல் மூட்டைகளும்!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!தலையில் பச்சைத் துண்டைக் கட்டிக்கொண்டு, ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால்... விவசாயிகளுக்கு அதைச் செய்வோம்... இதைச் செய்வோம்’ என்று முழங்கியபடி ஊர் ஊராகச் சுற்றிவருகிறார், முன்னாள்... மேலும் பார்க்க

பசுமை சந்தை

விற்க விரும்புகிறேன்ஆர்.நாகராசு,சொக்கலை,தஞ்சாவூர்.97863 57127இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட கறுப்புக் கவுனி புழுங்கல் அரிசி, குறுணை.கே.ஜெயமணி,செங்கமடை,ராமநாதபுரம்.97910 36746வியட்நாம் கறுப்புக் கவுனி... மேலும் பார்க்க