செய்திகள் :

விவாகரத்துக்காகக் காதலன் மனைவிக்கு ரூ. 3.7 கோடி கொடுத்த பெண்! ஓராண்டு சேர்ந்து வாழ்ந்த பின் நடந்தது என்ன?

post image

தன்னுடைய காதலனை விவாகரத்து செய்ய அவரது மனைவிக்கு ரூ. 3.7 கோடி கொடுத்த பெண், தன்னுடைய கணவரையும் விவாகரத்து செய்துவிட்டு, திருமணம் செய்துகொண்டார்.

ஆனால், ஓராண்டு சேர்ந்து வாழ்ந்தபிறகு, காதலனைப் பிடிக்கவில்லை என்றுகூறி, முன்னாள் மனைவியிடம் கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டு நீதிமன்றம் சென்றுள்ளார்.

சீனாவில் நடந்த இந்த விநோதமான காதல் கதை இன்று தலைப்புச் செய்தியாகியிருக்கிறது. காரணம் அந்த கதையில் நடந்த திருப்புமுனைதான். இன்று சீனாவில் பரபரப்பாகப் பேசப்படும் செய்திகளில் இதுவும் ஒன்றாக மாறியிருக்கிறது.

அது மட்டுமா, காதல், திருமணம், பணம், தொழில், நட்பு என பல தலைப்புகளில் இது விவாதப் பொருளாகவும் மாறியிருக்கிறது.

சீனாவில் மிகப்பெரிய தொழிலதிபராக இருப்பவர் ஸுஹு என்ற பெண், இவர் தன்னுடைய நிறுவனத்தில் பணியாற்றும் இளம் வயது ஊழியர் மீது காதல் வயப்பட்டார். ஆனால், இவருக்குமே திருமணமாகியிருந்தது. காதலுக்காக, தன்னுடைய கணவரைப் பிரியவும் முடிவு செய்தார்.

ஆனால், காதலனின் மனைவியை எப்படி விவாகரத்து செய்ய வைப்பது. அதற்காக ஸுஹு, காதலனின் மனைவிக்கு ரூ.3.7 கோடியை (மூன்று மில்லியன் யுவான் ) ஜீவனாம்சமாகவும், அவர்களது குழந்தையின் பராமரிப்புச் செலவுக்காகவும் கொடுத்துள்ளார். பிறகு, காதலனுக்கு விவாகரத்துக் கிடைத்திருக்கிறது.

பிறகு, காதலனை கரம்பிடித்தார் தொழிலதிபர் ஸுஹு. ஓராண்டு காதலனுடன் வாழ்ந்தபிறகுதான், அவருக்கு ஒன்று புலப்பட்டது. இவரும் சரியான இணையர் அல்ல என்பது. உடனே செய்த தவறை உணர்ந்த ஸுஹு, தான் கொடுத்தப் பணத்தைத் திருப்பிக் கேட்டு நீதிமன்றத்தை நாடினார்.

வழக்கை விசாரித்த சோங்குவிங் நீதிமன்றம், ஸுஹு பணத்தை திரும்ப அவரிடமே கொடுக்குமாறு உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து, பணத்தை வாங்கிய சென் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், சென்னுக்கு நேரடியாக ஸுஹு பணத்தை பரிசாக அளித்ததை அவரால் நிரூபிக்க முடியாமல் போனதை சுட்டிக்காட்டியது.

மேலும், விவாகரத்துக்கான இழப்பீடாகவே அந்த பணம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களது குழந்தையை வளர்க்கவும் அந்த பணம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், ஸுஹுவின் நடத்தையை கடுமையாகக் கண்டித்திருக்கும் நீதிமன்றம், தன்னுடைய பணத்தை வைத்து, ஒரு குடும்பத்தைப் பிரித்து விவாகரத்துப் பெற வைத்து, தற்போது மீண்டும் தன்னுடைய பணத்தைக் கேட்கிறார். இது முழுக்க முழுக்க ஏற்புடைய நடத்தை அல்ல என்று நீதிபதி தீர்ப்பளித்திருக்கிறார்.

முந்தைய தீர்ப்பை ரத்து செய்த நீதிபதி, பணத்தை திரும்பக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என உத்தரவிட்டார்.

தற்போது பணத்தை இழந்ததோடு, தன்னுடைய நடத்தைக்காக சமூக வலைத்தளங்களில் ஸுஹு கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

ஒருவருடைய திருமண வாழ்க்கையை கெடுத்துவிட்டு, அதற்கு பணம் கொடுக்கிறேன் என்று கொடுத்து, இப்போது அதையும் திரும்பக் கேட்பது நியாயமில்லை என்று பலரும் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

இனி, அழகான ஆண்களை திருமணம் செய்துகொள்ளுங்கள், அப்போதுதான், இப்படி பணக்காரராக முடியும் என்று எதிர்மறையான கருத்துகளும் வருகின்றன. முதல் முறையாக, அலுவலக ஊழியரின் விவாகரத்துக்கு ரூ.3.7 கோடியை முதலாளி செலவிட்டது இதுவே முதல்முறையாக இருக்கும் என்றும் பலரும் கருத்துகளை பதிவிடுகிறார்கள்.

அதிபர் டிரம்ப்பை சந்திக்க வாஷிங்டன் செல்கிறார் பாக். பிரதமர்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்திக்க, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் வாஷிங்டன் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது அவைக் கூட்டத்தில் பங்கேற்க, பாகிஸ்தான் பிரதமர் ஷ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீது மீண்டும் தாக்குதல்! பெட்டிகள் தடம் புரண்டதில் 12 பேர் படுகாயம்!

பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதலில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். பாகிஸ்தானின் பெஷாவர் நகரத்தில் இருந்து பலூசிஸ்தான் தலைநகர் குவேட்டவை நோக்கி, 270 பயணிகளுடன் ஜாஃபர்... மேலும் பார்க்க

உக்ரைனின் பக்கமே இந்தியா! - அமெரிக்காவிடமிருந்து முரண்படும் ஸெலென்ஸ்கி

இந்தியாவுக்கு எதிரான அமெரிக்காவின் கருத்துக்கு உக்ரைன் அதிபர் வோலோதிமீர் ஸெலென்ஸ்கி எதிர்வினையாற்றியுள்ளார். முன்னதாக, ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப், உக்ரைன் ... மேலும் பார்க்க

பாங்காக் சாலையில் ஏற்பட்ட மகா பள்ளம்! புகைப்படங்கள்

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் சாலையில் ஏற்பட்ட மிகப்பெரிய பள்ளத்தில் ஏராளமான வாகனங்கள் விழுந்து மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.ஹாலிவுட் திரைப்படங்களில் தோன்றும் காட்சி போல, பாங்காக்கில், புதன்கிழ... மேலும் பார்க்க

9 நாடுகளுக்கு சுற்றுலா, பணி விசாக்கள் நிறுத்தம்! ஐக்கிய அரபு நாடுகள் அதிரடி! இந்தியர் நிலை என்ன?

ஐக்கிய அரபு அமீரகத்தால் வழங்கப்படும் சுற்றுலா மற்றும் பணி விசாக்களை 9 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு மறுஅறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைத்துள்ளது.ஐக்கிய அரபு அமீரக அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்... மேலும் பார்க்க

தைவானில் ரகாசா சூறாவளி: ஏரி உடைந்து 14 பேர் பலி; 129 பேரை காணவில்லை

தைவான் நாட்டின் ஏற்பட்ட மிகப்பெரிய ரகாசா சூறாவளி காரணமாக, ஏரியின் கரை உடைந்து, தண்ணீர் ஊருக்குள் புகுந்ததில் 14 பேர் பலியாகினர். 129 பேரைக் காணவில்லை.தைவான் நாட்டின் ஹுவாலின் கவுண்டி பகுதியில் இருக்கு... மேலும் பார்க்க