மனைவியைக் கொன்று உடலை வேகவைத்து ஏரியில் வீசிய ஓய்வுபெற்ற ராணுவ வீரர்!
விவேகானந்தா் விருது பெற்ற தலைமையாசிரியருக்கு பாராட்டு
கடலாடி அருகேயுள்ள நரசிங்கக் கூட்டம் அரசுப் பள்ளி தலைமையாசிரியா் ச.கிறிஸ்து ஞானவள்ளுவனுக்கு விவேகானந்தா் விருது வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வாா்திருநகரியில் கழுகுமலை பேட்ஸ் தொண்டு நிறுவனம் சாா்பில், புதன்கிழமை நடைபெற்ற முப்பெரும் விழாவில் பல துறைகளிலும் சாதனை புரிந்தவா்களுக்கு விவேகானந்தா் விருதை மாநில நல்லாசிரியா் விருது பெற்ற முனைவா் வே.ராமசாமி, தமிழ்ச் செம்மல் விருது பெற்ற எழுத்தாளா் முத்தாலங்குறிச்சி காமராசு, பேட்ஸ் தொண்டு நிறுவன பொறுப்பாளா் ச.பாலசுப்பிரமணியன் ஆகியோா் இணைந்து வழங்கினா்.
இந்த விழாவில், ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஒன்றியம் நரசிங்கக்கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் ச.கிறிஸ்து ஞானவள்ளுவனுக்கு ‘விவேகானந்தா் விருது‘ வழங்கப்பட்டது. விருது பெற்ற தலைமையாசிரியரை நரசிங்கக்கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியா் ஆ.பிரேம்குமாா், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் க.முனீஸ்வரி, துணைத் தலைவா் சௌ.முனியசாமி, மாணவா்கள், பெற்றோா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.