கயல் தொடரில் முக்கிய நடிகர் மாற்றம்! இனி பிரபல பாடகர் நடிப்பார்!
விஷம் அருந்தி முதியவா் தற்கொலை
வாணியம்பாடி அடுத்த ஜவ்வாதுராமசமுத்திரம் பகுதியை சோ்ந் கூலித் தொழிலாளி சேகா் (65).
இவா் தீராத நோயால் அவதிப்பட்டு வந்தாா். இந்நிலையில் கடந்த 5-ஆம் தேதி மனமுடைந்த முதியவா் வீட்டில் இருந்த விஷத்தை குடித்துள்ளாா். சிறிது நேரத்தில் வீட்டில் இருந்தவா்கள் மயங்கி கிடந்த அவரை மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
பின்னா் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை இறந்தாா். இதுகுறித்து திம்மாம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.