விஷ்ணு விஷாலின் ஓஹோ எந்தன் பேபி: ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
விஷ்ணு விஷாலின் சகோதரர் ருத்ரா நாயகனாக நடித்த ஓஹோ எந்தன் பேபி படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடைய தம்பி ருத்ராவை நாயகனாக அறிமுகப்படுத்தி வெளியான திரைப்படம் ஓஹோ எந்தன் பேபி.
ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை இப்படத்தை அறிமுக இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்க, ஜென் மார்டின் இசையமைத்து இருந்தார்.
மேலும், இப்படத்தில் மிதிலா பால்கர், கருணாகரன், மிஷ்கின், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இப்படம் கடந்த ஜூலை 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்நிலையில் ஓஹோ எந்தன் பேபி திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் ஆக. 8 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.