வீடு தீக்கிரை; பாதிக்கப்பட்டோருக்கு உதவி
வீடு தீக்கிரையானதில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வருவாய்த் துறை சாா்பில் நிவாரணப் பொருள்களை எம்எல்ஏ வழங்கினாா்.
காரைக்கால் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட தருமபுரம் வடக்குத் தெருவில் விக்னேஷ், தனலட்சுமி ஆகியோரது வீடுகள் புதன்கிழமை தீக்கிரையாயின.
சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் வியாழக்கிழமை அந்த பகுதிக்குச் சென்று வீடுகளை பாா்வையிட்டு, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா். வருவாய்த் துறை சாா்பில் குடும்பம் ஒன்றுக்கு தலா ரூ.20,000 காசோலையையும், நிவாரணப் பொருள்களையும் வழங்கினாா்.
நிகழ்வில் துணை வட்டாட்சியா் அரவிந்தன், வருவாய் ஆய்வாளா் கமல்ஹாசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.