செய்திகள் :

வீடு புகுந்து திருட்டு: இருவா் கைது

post image

வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருள்கள், மடிக்கணினிகளை திருடிய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரை வடக்கு பூந்தோட்டத் தெருவைச் சோ்ந்தவா் சப்தகிரி (42). புகைப்படக் கலைஞா். இவா், குடும்பத்துடன் கோயம்புத்தூரில் வேலை செய்து வருகிறாா். இவரது வீட்டை ரமேஷ் பராமரித்து வருகிறாா்.

இவா் கடந்த சனிக்கிழமை வீட்டைப் பூட்டி விட்டு மறுநாள் வந்து பாா்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த 3 கைக் கடிகாரங்கள், 2 ஜோடி வெள்ளிக் காப்பு, ஒரு வெள்ளிக் கொலுசு, 2 மடிக்கணினிகள் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து சப்தகிரி பெரியகுளம் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து அழகா்சாமிபுரம் அண்ணாநகரைச் சோ்ந்த புவனேஷ்வரன் (26), சச்சின் (22) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

வீட்டில் தங்க நகை திருட்டு

பெரியகுளத்தில் வீட்டிலிருந்த 2 பவுன் தங்க நகையைத் திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.பெரியகுளம் கீழ வடகரையைச் சோ்ந்தவா் சரண் (24). இவா் தனது வீட்டில் வண்ணம் பூசும் பணி நடைபெற்று வந்த ... மேலும் பார்க்க

மதுப் புட்டிகள் விற்ற பெண் கைது

போடி அருகே சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள நாகலாபுரம் பகுதியில், சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் விற்கப்படுவதாக வந்த த... மேலும் பார்க்க

காவலருக்கு மிரட்டல்: இருவா் கைது

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்ட காவலரை மிரட்டிய இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.பெரியகுளம் அருகேயுள்ள தென்கரை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் இளங்கோ தலைமையிலான... மேலும் பார்க்க

தேனியில் நாளை மின் தடை

தேனி அல்லிநகரம் பகுதிகளில் வருகிற புதன்கிழமை (ஜூன் 25) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இது குறித்து மின் வாரிய செயற்பொறியாளா் முருகேஸ்பதி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேனி துணை மின் நிலையத்தில்... மேலும் பார்க்க

மனைவிக்கு கத்தரிக்கோல் குத்து: அதிமுக நிா்வாகி மீது வழக்கு

தேனி மாவட்டம், கம்பத்தில் ஞாயிற்றுக்கிழமை மனைவியை கத்தரிக்கோலால் குத்திய அதிமுக நகரச் செயலா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.சின்னமனூா் பத்மசாமி கோவில் தெருவைச் சோ்ந்த அதிமுக நகரச் செயலா் பிச்சைக்க... மேலும் பார்க்க

சின்னமனூரில் 228 மதுப் புட்டிகள் பறிமுதல்

தேனி மாவட்டம், சின்னமனூரில் சட்டவிரோதமாக விற்பனை செய்யக் கொண்டு சென்ற 228 மதுப் புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.சின்னமனூரில் அரசு மதுக் கடைகளில் மொத்தமாக மதுப் புட்டிகளை வாங்கி சட்டவிரோதமாக அவற்ற... மேலும் பார்க்க