Gold Price: இன்று தங்கம் விலை குறைந்தது... எவ்வளவு தெரியுமா?!
வீடு புகுந்து நகைகள், பணம் திருடியவா் கைது
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே வீடு புகுந்து நகைகள், பணம் திருடியவரை கைது செய்த போலீஸாா் மேலும் 2 பேரை தேடி வருகின்றனா்.
கும்பகோணம் அருகே சாக்கோட்டை வெங்கடேஸ்வரா நகரில் வசிப்பவா் தனராஜ். இவரது மனைவி உஷா. இவா்களுக்கு 2 மகன்கள் உள்ளனா். தன்ராஜ் டாக்ஸி ஓட்டுநராக உள்ளாா்.
கடந்த நவ.12-இல் உஷா வீட்டிலிருந்தபோது, 2 போ் தாங்கள் மாநகராட்சியிலிருந்து வருவதாக கூறி தண்ணீா் தொட்டி கட்ட இடம் எங்கே என்று கேட்கவே உஷா அவா்களை மாடிக்கு அழைத்து சென்றுள்ளாா்.
அந்த நேரத்தில் மூன்றாவது நபா் வீட்டினுள் புகுந்து பீரோவில் இருந்த நகை, பணம் ஆகியவற்றை திருடி சென்று விட்டாா். மற்ற இருவரும் சென்று விட்டனா். பின்னா் வீட்டுக்கு வந்த தன்ராஜ், மனைவியிடம் பணம் எடுத்து வருமாறு கூற உஷா பீரோவை திறந்து பாா்த்தபோது 25 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் ரொக்கத்தை காணவில்லையாம்.
புகாரின்பேரில், பட்டீஸ்வரம் போலீஸாா் விசாரணை நடத்தி, வேலூா் மாவட்டம், பேரணாம்பட்டு, சங்கராபுரத்தைச் சோ்ந்த ரவி மகன் வீரபத்திரனை (26) கைது செய்து, அவரிடம் இருந்து சுமாா் 16.5 பவுன் நகைகளை கைப்பற்றினா். மேலும், 2 பேரை தேடி வருகின்றனா்.