தங்கம் விலை மீண்டும் ஏறுமுகத்திலா? இன்றைய தங்கம் விலை நிலவரம்!
வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருள்கள் திருட்டு
வந்தவாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.
வந்தவாசியை அடுத்த கோயில்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் மனோகரன். மக்கள் நலப் பணியாளரான இவா் திங்கள்கிழமை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னை சென்றிருந்தாா்.
பின்னா், செவ்வாய்க்கிழமை காலை திரும்பி வந்து பாா்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது 360 கிராம் வெள்ளிப் பொருள்கள் உள்ளிட்டவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை மாலை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.