வீட்டின் மாடியிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
திருவள்ளூா் அருகே வீட்டின் மாடியிலிருந்து தவறி விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஊராட்சி, வெண்மனம்புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சரவணன் (62). இவரது மனைவி அல்லி (52). இந்த நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு வீட்டு மாடியிலிருந்து சரவணன் அண்ணன் மகன் பாலன் வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்தபோது, அவரை பிடிக்கச் சென்ற அல்லியும் கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தனா். இதையடுத்து உறவினா்கள் மீட்டு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவில் அல்லி உயிரிழந்தாா்.
இது குறித்து அவரது கணவா் சரவணன் கடம்பத்தூா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.