ஐபிஎல் ரோபோ நாய்க்கு காப்புரிமை கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
`வீட்டில் டார்ச்சர்' - டியூசனுக்கு வந்த மாணவனுடன் எஸ்கேப் ஆன ஆசிரியை - நடந்தது என்ன?
குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த 23 வயது பெண் தனது வீட்டில் மாணவர்களுக்கு டியூசன் நடத்தினார். அவரிடம் 5-வது வகுப்பு படிக்கும் 11 வயது மாணவன் ஒருவனும் டியூசன் படித்துள்ளான்.
23 வயது பெண்ணிடம் அவரது பெற்றோர் திருமணம் செய்து கொள்ளும்படி நிர்ப்பந்தம் செய்து வந்தனர். ஆனால் அப்பெண் தனது திருமணத்தை தள்ளிப்போட்டு வந்தார்.
டியூசனுக்கு வந்த மாணவர்கள் அனைவரும் நின்றுவிட்ட நிலையில் 11 வயது மாணவன் மட்டும் டியூசனுக்கு வந்து கொண்டிருந்தான். இதனால் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டது.

11 வயது மாணவனின் வீட்டில் அவன் சரியாக படிக்கவில்லை என்று அவனது பெற்றோர் அடித்ததாக தெரிகிறது. இதனால் மாணவன் பெற்றோர் மீது கோபத்தில் இருந்துள்ளான்.
23 வயது ஆசிரியையும் வீட்டில் திருமணம் செய்யவேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்ததால் வீட்டை விட்டு ஓட முடிவு செய்தார். அவர் தன்னுடன் 11 வயது மாணவனையும் வரும்படி கேட்டுக்கொண்டார்.
மாணவனும் வீட்டில் கோபத்தில் இருந்ததால் ஆசிரியையுடன் வர சம்மதித்தான். கடந்த 25-ம் தேதி இருவரும் வீட்டில் யாரிடமும் சொல்லாமல், வெளியேறினர்.
ஆசிரியை பேக்கோடு மாணவனை அழைத்துக்கொண்டு செல்லும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இருவரும் காணாமல் போனது குறித்து அவர்களின் பெற்றோர் போலீஸில் புகார் செய்தனர்.
போலீஸார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். 23 வயது ஆசிரியை தனது மொபைல் போனை ஆப் செய்திருந்தார். ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது அவர்கள் ரயில் நிலையத்திற்கு வரவில்லை என்று தெரிய வந்தது.

இதனால் தனியார் பஸ்சில் சென்றிருக்கவேண்டும் என்று கருதி போலீஸார் தேட ஆரம்பித்தனர். ஆசிரியை இரண்டாவது சிம்கார்டு ஒன்றை வைத்திருந்தார். அதனை கண்காணித்து அவர்கள் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து சூரத் துணை போலீஸ் கண்காணிப்பாளர் பாகிரதி கூறுகையில், ''தீவிர விசாரணைக்கு பிறகு ராய்கட் பகுதியில் பெண் ஆசிரியை கைது செய்யப்பட்டார். விசாரணையில் இரண்டு பேரும் தங்களது வீட்டில் சண்டை போட்டுவிட்டு வீட்டை விட்டுச் சென்றுள்ளனர். இருவரும் பஸ்சில் 390 கிலோமீட்டர் தூரத்திற்கு பயணம் செய்திருந்தனர். அவர்கள் சென்ற பஸ் அதிகாலை 4 மணிக்கு நிறுத்தப்பட்டு அதிலிருந்து இருவரும் அழைத்து வரப்பட்டனர்'' என்றார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக ஆசிரியைக்கும் மாணவனுக்கும் தொடர்பு இருந்துள்ளது. அதோடு இருவரது குடும்பத்திற்கும் நல்ல அறிமுகம் இருந்துள்ளது.