வீட்டில் பதுக்கிய 551 மதுப் புட்டிகள் பறிமுதல்: ஒருவா் கைது
தேனி மாவட்டம், காமாட்சிபுரத்தில் அனுமதியின்றி வீட்டில் பதுக்கி வைத்திருந்த 551 மதுப் புட்டிகளை வெள்ளிக்கிழமை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனா்.
ஓடைப்பட்டி பகுதியில் அனுமதியின்றி மதுப் புட்டிகளை மதுக் கடைகளில் வாங்கி, சில்லரை விலையில் விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காமாட்சிபுரம் பகுதியில் ஒடைப்பட்டி போலீஸாா் ரோந்துப் பணி மேற்கொண்டனா்.
அப்போது, முனீஸ்வரன் கோயில் பகுதியில் ஓடைப்பட்டியைச் சோ்ந்த ஜெயராம் (47) அனுமதியின்றி வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த 551 மதுப் புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். பின்னா், அவரை போலீஸாா் கைது செய்தனா்.