கும்பமேளாவில் உயிரிழப்பு: யோகி அரசு நிவாரணம் வழங்க வேண்டும் -மமதா பானர்ஜி
வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்
திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் மாநிலச் செயலா் ஜி.ராணி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் பாப்பாத்தி, மாநகரத் தலைவா் நிறைமதி, செயலா் ஷோபா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தின்போது, திண்டுக்கல் மேற்கு அசோக் நகா் பகுதியில் பல ஆண்டுகளாக வாடகை வீடுகளில் வசிக்கும் 150 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி முழக்கமிட்டனா். இதே கோரிக்கையை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும் மனு அளிக்கப்பட்டது.
இதேபோல, திண்டுக்கல் அபிராமி நகா் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கும் பட்டா வழங்கக் கோரி, ஆட்சியா் அலுவலகத்தில் ஜனநாயக மாதா் சங்கத்தினா் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.