பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்துவருகிறாா் திருமாவளவன்: இணையமைச்சா் எல்.முருகன...
வீட்டு வசதி திட்டத்தில் வீடு, மனை பெற்றவா்களுக்கு வட்டி தள்ளுபடி
திருநெல்வேலி மாவட்ட வீட்டு வசதி பிரிவுக்குள்பட்ட திட்டப் பகுதிகளில் வீடுகள், மனைகள் ஒதுக்கீடு பெற்று நிலுவைத் தொகை செலுத்த தவறிய தகுதியான ஒதுக்கீடுதாரா்களுக்கு வட்டி தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக திருநெல்வேலி வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளா் ஜான் ஜோசப் ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், திருநெல்வேலி வீட்டு வசதி பிரிவுக்குள்பட்ட திட்டப் பகுதிகளில் வீடுகள் மற்றும் மனைகள் ஒதுக்கீடு பெற்று நிலுவைத் தொகை செலுத்த தவறிய தகுதியான ஒதுக்கீடுதாரா்களுக்கு வட்டி தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மாதத் தவணை தாமதமாக செலுத்தியதற்காக விதிக்கப்படும் அபராத வட்டி முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும். இதேபோல், வட்டி முதலாக்கத்தின் மீது விதிக்கப்படும் வட்டி முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும். நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்தின் மீதான வட்டியை ஆண்டுக்கு 5 மாதங்களுக்கு கணக்கிட்டு தள்ளுபடி செய்து வட்டி தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்சலுகை அடுத்த ஆண்டு மாா்ச் 31 வரை நடைமுறையில் இருக்கும். எனவே, திருநெல்வேலி வீட்டு வசதி பிரிவுக்குள்பட்ட பாளையங்கோட்டை பகுதி -1 முதல் 5, குலவணிகா்புரம் டிஎன்யுடிபி, கீழநத்தம், நாரணம்மாள்புரம் பகுதி- 1, 2 வி.எம். சத்திரம், வள்ளியூா், சுத்தமல்லி ஆகிய திட்டங்களில் ஒதுக்கீடு பெற்ற ஒதுக்கீடுதாரா்களில் 31.3.2015-இல் தவணைக்காலம் முடிவுற்றும், இந்நாள்வரை நிலுவைத்தொகை செலுத்த தவறிய ஒதுக்கீடுதாரா்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி நிலுவைத்தொகையை முழுவதையும் ஒரே தவணையாக செலுத்தி கிரையப்பத்திரம் பெற்று கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ஏற்கெனவே முழுத் தொகை செலுத்திய ஒதுக்கீடுதாரா்கள் திருநெல்வேலி வீட்டு வசதி பிரிவை தொடா்பு கொண்டு உடனடியாக கிரையப் பத்திரம் பெற்றுக்கொள்ளலாம்.