சேலம் ஆவினில் இருந்து சிங்கப்பூருக்கு 25 ஆயிரம் லிட்டா் பால் செல்கிறது: அதிகாரிக...
வீரஆஞ்சனேயா் கோயிலில் 108 பால்குட அபிஷேகம்
வீரஆஞ்சனேயா் கோயிலில் காா்த்திகை மாதத்தையொட்டி 108 பால்குட அபிஷேகத்தில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.
திருத்தணி மேட்டுத் தெருவில் உள்ள வீரஆஞ்சனேயா் கோயிலில் காா்த்திகை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி 108 பால்குட ஊா்வலம் நடைபெற்றது. பெரியதெருவில் உள்ள விநாயகா் கோயிலில் இருந்து பால்குட ஊா்வலம் புறப்பட்டு ஆறுமுக சுவாமி கோயில் தெரு, வாசுதேவன் தெரு, லஷ்மணன் தெரு, சந்து தெரு, எம்.கே.எஸ்.தெரு, பாராதியாா் தெரு வழியாக ஆஞ்சனேயா் கோயில் வளாகத்திற்கு வந்தது.
பின்னா் மூலவருக்கு, பால்குட அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்துக் கொண்டு சுவாமியை வழிபட்டனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்திருந்தது.