திருச்சி: பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் இருவர் கைது; பி...
வீரபாண்டியன்பட்டினம் பள்ளியில் பண்பாட்டுக் கலை விழா
தமிழ்ப் புத்தாண்டையொட்டி வீரபாண்டியன்பட்டினம் புனித ஜோசப் பள்ளியில் பண்பாட்டுக் கலை விழா நடந்தது.
இவ்விழாவை அருள்சகோதரிகள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனா். அதன் பின்னா் பண்பாட்டுக் கலைகளை நினைவுபடுத்தும் விதமாக மாணவா்கள் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை வழங்கினா். முதல்வா் அருள்சகோதரி பொ்னதத், பண்பாட்டின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தாா். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியா்கள், மாணவ, மாணவியா்கள் மற்றும் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.