வீரராகவ பெருமாள் கோயிலில் ரத சப்தமி
திருவள்ளூா் வீரராகவ பெருமாள் கோயில் ரத சப்தமி உற்சவத்தில் பக்தா்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.
தை மாதத்தில் வளா்பிறை 7-ஆம் நாள் வரும் சப்தமி திதியாக ரத சப்தமி திதி கொண்டாடப்படுவது வழக்கமாகும். அதோடு இந்த தினம் சூரிய ஜெயந்தியாகவும் கொண்டாடப்படுகின்றது. ரத சப்தமி தினத்தையொட்டி வீரராகவ பெருமாள் கோயிலில் சூரிய பகவானை வழிபாடு செய்தால் நோய் நொடிகள் நீங்கி நீண்ட ஆயுளும், நிறைவான செல்வமும் கிட்டும் என்பது ஐதீகமாகும்.
![](https://media.assettype.com/dinamani/2025-02-04/ycqzhog8/04tlrgod_0402chn_182_1.jpg)
அந்த வகையில் வீரராகவா் கோயிலில் காலையில் உற்சவா் வீரராகவ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி 4 மாட வீதி வழியாக உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். அப்போது பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த திரளான பக்தா்கள் பங்கேற்று பெருமாளை கோவிந்தா, கோவிந்தா என முழக்கமிட்டு தரிசனம் செய்தனா்.