செய்திகள் :

வீர தீர சூரன் படம் வெளியாகுமா?

post image

விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் திரைப்படம் இன்று வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சித்தா படத்தின் இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் வீர தீர சூரன். இந்தப் படத்தில் எஸ்.ஜே சூர்யா, சூரஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களைக் கொண்ட முழுநீள ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் வீர தீர சூரன் இன்று திரையரங்குகளில் வெளியாகவிருந்தது.

இந்த நிலையில் மும்பையைச் சேர்ந்த பி4யு என்ற நிறுவனம், வீர தீர சூரன் படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

படத்தின் தயாரிப்பு நிறுவனம் பி4யு நிறுவனத்திடமிருந்து நிதியுதவி பெற்றுள்ளது. எனவே, இப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை அந்நிறுவனத்திற்கு தயாரிப்பாளர் கொடுத்தார்.

ஆனால் படத்தின் டிஜிட்டல் உரிமம் விற்கப்படாமல் படம் வெளியாவதால் படத்தை ஓடிடி-யில் விற்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக பி4யு நிறுவனம் குற்றச்சாட்டு வைத்துள்ளது.

இந்த வழக்கு இன்று காலை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், "வீர தீர சூரன் படத்தின் தயாரிப்பாளர் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு உடனடியாக ரூ.7 கோடி வழங்கவேண்டும். மேலும், இந்தப் படத்தின் ஓடிடி உரிமம் விற்கப்படுவதற்கு முன் படத்தை வெளியிட முன்வந்ததால் 48 மணி நேரத்திற்குள் இதுதொடர்பான அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்" என தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்தப் படத்தை இன்று வெளியிட இடைக்கால தடை விதித்துள்ளது.

திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு ஏற்கனவே நடைபெற்று வந்த நிலையில் காலை காட்சி ஓடாததால் அனைவருக்கும் பணம் திருப்பியளிக்கப்பட்டது. இந்த நிலையில், மதியக் காட்சியும் திரையிடப்படவில்லை.

படம் இன்று வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் ரசிகர்கள் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளுக்கான பணத்தைத் திரும்பப் பெற திரையரங்குகளில் கூடி வருகின்றனர்.

இதையும் படிக்க | தேசிய விருது பெற்ற இயக்குநரின் படத்தில் நடிக்கும் ராம் சரண்!

வீர மகாகாளியம்மன் கோயிலில் திருநடனத் திருவிழா: திரளானோர் பங்கேற்பு!

வீர மகாகாளியம்மன் கோயிலில் 56-ஆம் ஆண்டு திருநடனத் திருவிழா, படுகளம் பார்த்தல் நிகழ்வு நடைபெற்றது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வங்... மேலும் பார்க்க

முதலிடத்தில் சிறகடிக்க ஆசை! தமிழ்நாட்டின் டாப் 5 தொடர்கள் எவை?

சின்ன திரை தொடர்களுக்கான டிஆர்பி பட்டியல் அடிப்படையில், தமிழ்நாட்டின் சிறந்த தொடர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதில், சன் தொலைக்காட்சிகளின் தொடர்களை பின்னுக்குத்தள்ளி விஜய் தொலைக்காட்சியின் சிறக... மேலும் பார்க்க

குட் பேட் அக்லி கால அளவு இவ்வளவுதானா?

குட் பேட் அக்லி திரைப்படத்தின் கால அளவு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித் குமார் கூட்டணியில் உருவான குட் பேட் அக்லி திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளைப் பெற்றுள... மேலும் பார்க்க

2 நாள்களில் ரூ.100 கோடி வசூலித்த சிக்கந்தர்!

சல்மான் கான் நடித்த சிக்கந்தர் படம் 2 நாள்களில் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளது.நடிகர் சல்மான் கான் நடித்த சிக்கந்தர் திரைப்படம் கடந்த மார்ச்.30இல் திரையரங்குகளில் வெளியாகியது. இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ... மேலும் பார்க்க

மணிமேகலைக்கு வாழ்த்து தெரிவித்த சக தொகுப்பாளினிகள்! காரணம் என்ன?

சின்ன திரை நடிகையான மணிமேகலை, சிறந்த தொகுப்பாளருக்கான விருதைப் பெற்றுள்ளார். வாழ்வில் எத்தனை சவால்கள் வந்தாலும், தங்கள் பணியில் நேர்மையாகவும் உண்மையான உழைப்பையும் கொடுப்பவராக இருந்தால் எதிர்பார்த்ததை ... மேலும் பார்க்க

வீர தீர சூரன் - இதுவரை வசூல் எவ்வளவு?

விக்ரம் நடித்த வீர தீர சூரன் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. விக்ரம் - அருண் குமார் கூட்டணியில் உருவான வீர தீர சூரன் திரைப்படம் கடந்த வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. அதிரடியான ஆக்சன் படம... மேலும் பார்க்க