தங்கத்தின் விலை குறைய ஆரம்பிக்கிறதா, முதலீட்டாளர்கள் என்ன பண்ணனும்? | IPS Financ...
வீ.கே.புதூரிலிருந்து இலங்கை சென்றவா் மாயம்: உறவினா்கள் தவிப்பு
தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூரிலிருந்து இலங்கை தலைநகா் கொழும்புக்கு சென்றிருந்தவா் காணாமல் போனாா். இதனால் அவரது குடும்பத்தினா் தவிப்புக்கு ஆளாகியுள்ளனா்.
வீரகேரளம்புதூா் மாடசாமி கோயில் தெருவைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் மகன் மாரியப்பன்(42). இவா், கடந்த ஜன. 15இல் சுற்றுலா விசா மூலம் சென்னையில் இருந்து இலங்கை சென்றுள்ளாா். அங்கிருந்து ஏப்.16இல் ஊா் திரும்புவதாக கூறியிருந்த அவா், அதற்கு முந்தைய நாள் (ஏப்.15) குடும்பத்தினரிடம் பேசியுள்ளாா். அதன்பிறகு அவரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லையாம்.
இந்நிலையில்,கொழும்பில் மாயமான தனது அண்ணனை மீட்டுத்தரக் கோரி, மாரியப்பனின் தம்பி காளிராஜ், தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா், மாநிலங்களவை உறுப்பினா் வைகோ ஆகியோரிடம் மனு அளித்துள்ளாா். மாரியப்பனை மீட்டுத்தர வலியுறுத்தி, வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கருக்கு இமெயில் மூலமாக வைகோ கடிதம் எழுதியுள்ளாா்.