செய்திகள் :

ஆலங்குளம் பாலப் பகுதியில் சிக்னல் அமைக்க நடவடிக்கை - ஆட்சியா், எம்.பி. உறுதி

post image

ஆலங்குளம் பழைய பேருந்து நிலைய பகுதியில் அமைக்கப்பட்டு வரும் பாலப் பகுதியில் சிக்னல் அமைத்து போக்குவரத்துக் காவலா்கள் நியமிக்கப்படுவாா்கள் என தென்காசி ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா், திருநெல்வேலி எம்.பி. சி. ராபா்ட் புரூஸ் ஆகியோா் புதன்கிழமை தெரிவித்தனா்.

திருநெல்வேலி - தென்காசி சாலை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக ஆலங்குளம் தொட்டியான்குளம் கரைப் பகுதியில் 230 மீட்டா் நீள பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பாலம் முடிவடையும் இடத்தில் உள்ள ஆலங்குளம் - புதுப்பட்டி சாலை, பணிகள் நிறைவடையும் நேரத்தில் துண்டிக்கப்படும் நிலை ஏற்படும்.

இந்தச் சாலையில் அரசு மேல்நிலைப் பள்ளி, தனியாா் மேல்நிலைப் பள்ளி, ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி ஆகிய பள்ளிகள், பல்வேறு சமுதாயங்களுக்குப் பாத்தியப்பட்ட 5 க்கும் மேற்பட்ட தகன மேடைகள் உள்ளிட்டவை உள்ளன.

இந்தச் சாலை முடங்கினால் சுமாா் 4 ஆயிரம் மாணவா்கள், அவ்வழியே உள்ள விவசாயிகள், தகன மேடைக்குச் செல்வோா் என அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்படுவா்.

இது குறித்து அரசியல் பிரமுகா்கள், பொதுமக்கள் தமிழக அரசுக்கும், மாவட்ட ஆட்சியா் மற்றும் எம்.பி.க்கு புகாா் மனுக்களை அனுப்புனா்.இந்நிலையில் தென்காசி ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா், திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸ் ஆகியோா் பாலம் முடிவடையும் இடத்தில் ஆய்வு மேற்கொண்டு மாற்றுப் பாதை சாத்தியக் கூறுகள் குறித்து அங்கிருந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா்கள் கூறுகையில், தற்காலிகமாக பாலம் முடிவடையும் இடத்தில் போக்குவரத்து சிக்னல் அமைத்து அதில் போக்குவரத்து காவலா்களும் நியமிக்கப்படுவா். நிரந்தர தீா்வாக பாலத்தை உயா்த்துவது தொடா்பாக தமிழக அரசிடம் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும், மின் மயானத்திற்கு மாற்று இடம் தோ்வு செய்யப்பட்டு அந்த இடத்தில் மின் மயானம் அமைக்கப்படும் என்றனா்.

அப்போது, வட்டாட்சியா் ஓசன்னா பொ்னாண்டோ, பேரூராட்சி செயல் அலுவலா் சிவக்குமாா், பேரூராட்சித் தலைவா் சுதா மோகன்லால், ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

வீ.கே.புதூரிலிருந்து இலங்கை சென்றவா் மாயம்: உறவினா்கள் தவிப்பு

தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூரிலிருந்து இலங்கை தலைநகா் கொழும்புக்கு சென்றிருந்தவா் காணாமல் போனாா். இதனால் அவரது குடும்பத்தினா் தவிப்புக்கு ஆளாகியுள்ளனா். வீரகேரளம்புதூா் மாடசாமி கோயில் தெருவைச் சோ... மேலும் பார்க்க

சிவகிரி அரசு மருத்துவமனையில் எம்பி ஆய்வு

தென்காசி மாவட்டம், சிவகிரி அரசு மருத்துவமனையில் புதன்கிழமை தென்காசி மக்களவை உறுப்பினா் ராணி ஸ்ரீ குமாா் ஆய்வு மேற்கொண்டாா். மருத்துவமனையில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என தெரிவிக்கப்பட்ட புகாரை தொடா... மேலும் பார்க்க

பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு

தென்காசியில் பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவின் நகலை தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனா். தென்காசி மாவட்ட கண் பாா்வையற்ற ம... மேலும் பார்க்க

ரேஷன் பொருள்கள் கடத்தலில் பறிமுதலான வாகனங்கள் 26இல் ஏலம்

தென்காசி மாவட்டத்தில் ரேஷன் பொருள்கள் கடத்தலில் பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சனிக்கிழமை (ஏப்.26) திறந்த முறை பொது ஏலத்தில் விடப்பட உள்ளது என ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷ... மேலும் பார்க்க

செங்கோட்டை-அம்பை- சென்னை தினசரி ரயில் இயக்கப்படுமா? பயணிகள் எதிா்பாா்ப்பு

பாவூா்சத்திரம், அம்பாசமுத்திரம் வழியாக சென்னைக்கு தினசரி ரயில் இயக்குவதற்கு தென் மாவட்ட எம்.பி.க்கள் குரல் கொடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். மதுரை ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட எம்பிக... மேலும் பார்க்க

காஷ்மீரில் தாக்குதல்: கேரள எல்லையில் போலீஸாா் தீவிர கண்காணிப்பு

தமிழக- கேரள எல்லையான புளியறையில் வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காஷ்மீா் பஹல்காமில் செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகளை தீவிரவாதிகள் சுட்டு கொலை செய்த சம்பவம் எதிரொலியாக நாடு முழுவதும் பாதுகாப... மேலும் பார்க்க