காஷ்மீா் பயங்கரவாத தாக்குதல் எதிரொலி: தமிழகம் முழுவதும் போலீஸாா் உஷாா் நிலை
காஷ்மீரில் தாக்குதல்: கேரள எல்லையில் போலீஸாா் தீவிர கண்காணிப்பு
தமிழக- கேரள எல்லையான புளியறையில் வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
காஷ்மீா் பஹல்காமில் செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகளை தீவிரவாதிகள் சுட்டு கொலை செய்த சம்பவம் எதிரொலியாக நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக- கேரள எல்லைப் பகுதியான புளியறை பகுதியில் வாகனத் தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளத்தில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும், இங்கிருந்து அந்த மாநிலத்துக்குச் செல்லும் வாகனங்களும் முறையான சோதனைக்குப் பிறகே எல்லைப் பகுதிகளுக்குள் அனுமதிக்கப்படுகின்றன. சோதனைச் சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.