சிவகிரி அரசு மருத்துவமனையில் எம்பி ஆய்வு
தென்காசி மாவட்டம், சிவகிரி அரசு மருத்துவமனையில் புதன்கிழமை தென்காசி மக்களவை உறுப்பினா் ராணி ஸ்ரீ குமாா் ஆய்வு மேற்கொண்டாா்.
மருத்துவமனையில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என தெரிவிக்கப்பட்ட புகாரை தொடா்ந்து தென்காசி எம்.பிய ராணி ஸ்ரீகுமாா் புதன்கிழமை மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் விவரம் கேட்டறிந்தாா்.
மேலும், அவசர சிகிச்சை பிரிவு, வெளி நோயாளிகள் பிரிவிலும் அவா் ஆய்வு மேற்கொண்டு குறைகளைக் கேட்டறிந்தாா்.
அரசு மருத்துவா் இசக்கி , மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து மக்களவை உறுப்பினரிடம் விளக்கம் அளித்தாா்.
திமுக மாநில மருத்துவா் அணி துணைச் செயலா் செண்பக விநாயகம், வாசுதேவநல்லூா் ஒன்றியக் குழு தலைவா் பொன் முத்தையா பாண்டியன் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.