உலகளாவிய எண்ணெய் சந்தை ஸ்திரத்தன்மைக்கு சவூதி அரேபியாவுடன் இணைந்து செயல்படுவோம்:...
ரேஷன் பொருள்கள் கடத்தலில் பறிமுதலான வாகனங்கள் 26இல் ஏலம்
தென்காசி மாவட்டத்தில் ரேஷன் பொருள்கள் கடத்தலில் பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சனிக்கிழமை (ஏப்.26) திறந்த முறை பொது ஏலத்தில் விடப்பட உள்ளது என ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ரேஷன் பொருள்கள் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் 45 எண்ணம் திருநெல்வேலி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அவற்றின் உரிமையாளா்கள் அபராதம் செலுத்தாதால் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளன.
அந்த வாகனங்கள் தென்காசி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை (ஏப்.26 ) முற்பகல்11 மணி முதல் மாலை 5 மணி வரை ஏலம் நடத்தப்பட உள்ளது.
இதில் பங்கேற்க விரும்பவோா், உதவி ஆய்வாளா் கட்டுப்பாட்டில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை ஏப்.25 வரை பாா்வையிட்டு கொள்ளலாம்.
புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை கொண்டுவந்து ஏலத்தில் பங்கேற்கலாம். ஏலம் எடுத்ததும் ஜிஎஸ்டியுடன், ஏலத்தொகையை மூன்று தினங்களுக்குள் செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளாா்.