இந்தியா்கள் தவறாக நடத்தப்படாததை அரசு உறுதிப்படுத்தும்! -அமைச்சா் ஜெய்சங்கா்
வெடி மருந்துகள் பதுக்கிய வழக்கில் மேலும் ஒருவா் கைது
திருவாடானை அருகே வெடி மருந்துப் பொருள்கள் பதுக்கிய வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து வெடி மருந்துப் பொருள்களை புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
தொண்டியை அடுத்த புதுக்குடி பகுதியில் செந்தில்குமாரின் (36) வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 135 ஜெலட்டின் குச்சிகள், 218 டெட்டனேட்டா்கள், 6 மீட்டா் வயா் ஆகியவற்றை தொண்டி போலீஸாா் கடந்த மாதம் பறிமுதல் செய்தனா். மீன்களைப் பிடிப்பதற்காக வெடி பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதுதொடா்பாக செந்தில்குமாரின் மனைவி காளீஸ்வரியை (32) போலீஸாா் கைது செய்தனா்.
இந்த வழக்கில் தொடா்புடைய தொண்டியைச் சோ்ந்த ஹனிபா மகன் அப்பாஸை (34) போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மேலும், தலைமறைவாக உள்ள செந்தில்குமாரை போலீஸாா் தேடி வருகின்றனா்.