செய்திகள் :

வெறுப்புணர்வு பற்றி யோகி எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

post image

வெறுப்புணர்வு பற்றி உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த சிறப்பு நேர்க்காணலில், நாட்டில் நிலவும் அரசியல் பிரச்னைகள் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார்.

அப்போது ஹிந்தி எதிர்ப்பு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த யோகி ஆதித்யநாத், “வாக்கு வங்கி குறைந்துவிட்டதாக உணர்ந்ததால், முதல்வர் ஸ்டாலின் மொழி அடிப்படையிலான பிளவுகளை உருவாக்க முயற்சிக்கிறார். மொழி அடிப்படையில் நாட்டை பிளவுபடுத்தக் கூடாது. காசி - தமிழ் சங்கமத்தை பிரதமர் மோடி நடத்தி வருகிறார். சமஸ்கிருதத்தைப் போல தமிழின் வரலாறும் பழமையானது. இந்திய பாரம்பரியத்தின் கூறுகள் தமிழில் இருப்பதால், ஒவ்வொரு இந்தியருக்கும் தமிழ் மீது மரியாதை உண்டு. பிறகு ஏன் ஹிந்தியை வெறுக்க வேண்டும். மொழி ஒன்றிணைக்க மட்டுமே வேலை செய்யும், பிரிவினைக்கு அல்ல” எனத் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருப்பதாவது:

“இருமொழிக் கொள்கை மற்றும் நியாயமான தொகுதி மறுசீரமைப்பு குறித்த தமிழ்நாட்டின் உறுதியான குரல் நாடு முழுவதும் எதிரொலிக்கிறது. பாஜக தலைவர்கள் அதிர்ச்சியடைந்திருப்பது அவர்களின் நேர்க்காணல்களில் தெரிகிறது.

வெறுப்புணர்வு குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் எங்களுக்கு பாடம் எடுக்கத் தேவையில்லை. அவருடைய கருத்து முரண்பாடல்ல, அரசியலின் பிளாக் காமெடி.

நாங்கள் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை, திணிப்பு மற்றும் ஆதிக்கத்தை மட்டுமே எதிர்க்கிறோம். நாங்கள் செய்வது வாக்கு வங்கிக்கான கலவர அரசியல் அல்ல, கண்ணியம் மற்றும் நீதிக்கான போராட்டம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க : முஸ்லிம்களுக்கு பாதுகாப்பானது உத்தரப் பிரதேசம்: யோகி ஆதித்யநாத்

தலைநகரை சென்னையிலிருந்து திருச்சிக்கு மாற்ற வேண்டும்: பேரவையில் காரசாரம்

தமிழகத்தின் தலைநகரை மாற்ற வேண்டும் என பாஜக எம்எல்ஏ வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து, இந்தியாவின் தலைநகரை சென்னைக்கு மாற்ற வேண்டும் என அவைத் தலைவர் கோரிக்கை வைத்ததால் அவையில் கலகலப்பான சூழல் ஏற்பட்டது.தமிழ... மேலும் பார்க்க

நீலகிரி செல்வோர் கவனத்துக்கு... திருப்பி அனுப்பப்படும் வாகனங்கள்!

நீலகிரிக்கு வருகை தரும் வாகனங்களுக்கு இன்று(ஏப்ரல் 1) முதல் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்ட நிலையில், இ-பாஸ் பெறாத வாகனங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.நீலகிரியில் அளவுக்கு அதிகமான வாகனங்... மேலும் பார்க்க

கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு

சென்னை: தமிழகத்தின் பெருமைமிகு வேளாண் உற்பத்திப் பொருள்களில் முக்கியமானதாக விளங்கும் கும்பகோணம் வெற்றிலை மற்றும் தோவாளை மாணிக்க மாலை ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.ஒரு குறிப்பிட்ட ப... மேலும் பார்க்க

திருச்சி நூலகத்திற்கு காமராஜர் பெயர்: முதல்வர் அறிவிப்பு

திருச்சியில் புதிதாக அமையவுள்ள நூலகத்திற்கு காமராஜர் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். மேலும் பார்க்க

குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியீடு!

குரூப் 1 மற்றும் 1ஏ தேர்வுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.குரூப் 1 முதல்நிலைத் தேர்வு வரும் ஜூன் மாதம் 15ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்ப... மேலும் பார்க்க

கல்லாற்றின் குறுக்கே மேலும் ஒரு தடுப்பணை: அமைச்சர் துரைமுருகன்

பெரம்பலூர் மாவட்டம் கல்லாற்றின் குறுக்கே மேலும் ஒரு தடுப்பணைக் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் தெரிவித்துள்ளார்.சனி, ஞாயிறு மற்றும் ரமலான் பண்டிகையால் திங்கள்கிழமை... மேலும் பார்க்க