செய்திகள் :

வெற்றிமாறனுக்கு நன்றி தெரிவித்த மஞ்சு வாரியர்!

post image

விடுதலை -2 படத்தில் மகாலட்சுமி கதாபாத்திரத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகை மஞ்சு வாரியர்.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் விடுதலை - 2 திரைப்படம் நேற்று (டிச. 20) திரையரங்குகளில் வெளியானது.

முதல் பாகத்திற்குக் கிடைத்த வரவேற்பால் இரண்டாம் பாகத்தின் மேல் எதிர்பார்ப்பு இருந்தது.

முழுக்க முழுக்க அரசியல் படமாக விடுதலை - 2 உருவாகியுள்ளது. இதில் நடிகை மஞ்சு வாரியர் வரும் காட்சிகள் மட்டுமே ரசிகர்களுக்கு இதமாக இருக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது.

விடுதலை 2 படத்தில் மிகவும் முற்போக்கான கதாபாத்திரத்தில் மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் மகாலட்சுமி கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ள மஞ்சு வாரியர் தனது இன்ஸ்டா பக்கத்தில் படப்பிடிப்பு புகைப்படங்களைப் பகிர்ந்து, “ மகாலட்சுமி கதாபாத்திரத்துக்காக நன்றி வெற்றிமாறன் சார். தற்போது திரையரங்குகளில் விடுதலை -2” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே, வெற்றிமாறனின் அசுரன் படத்தில் மஞ்சு வாரியர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பிசாசு - 2 வெளியீடு எப்போது?

நடிகை ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி நடித்த பிசாசு - 2 படத்தின் வெளியீடு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான 'பிசாசு' திரைப்படம் பெரிய வெற்றியடைந்ததைத் தொடர்ந... மேலும் பார்க்க

ராபின் உத்தப்பாவுக்கு கைது ஆணை?

ராபின் உத்தப்பாவின் நிறுவன ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் மோசடி செய்ததாக உத்தப்பா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா இயக்குநராக உள... மேலும் பார்க்க

சார்பட்டா - 2 படப்பிடிப்பு அப்டேட்!

ஆர்யா - பா. இரஞ்சித் கூட்டணியில் உருவாகவுள்ள சார்பட்டா - 2 படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரைதிரைப்படம் 202... மேலும் பார்க்க

விடுதலை - 2 முதல் நாள் வசூல்!

விடுதலை - 2 திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவான விடுதலை - 2 திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இயக்குநர் வெற்றி மாறனி... மேலும் பார்க்க

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.21-12-2024 சனிக்கிழமைமேஷம்:இன்று ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பிள்ளைகளை அனுசரித்து செ... மேலும் பார்க்க

டி20 தொடா்: வங்கதேசத்துக்கு முழுமையான வெற்றி

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் வங்கதேசம் 80 ரன்கள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வென்றது. இதையடுத்து, 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை, அந்த அணி 3-0 என முழுமையாகக் கைப்பற்றி சாம்பியன் ... மேலும் பார்க்க