செய்திகள் :

வெற்றிமாறன், அனுராக் காஷ்யப் மீது ஐ.ஜி.யிடம் புகாா்!

post image

‘பேட் கோ்ள்’ திரைப்பட இயக்குநா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தென் மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்காவிடம் வழக்குரைஞா் வெங்கடேஷ் சனிக்கிழமை புகாா் அளித்தாா்.

பிரபல திரைப்பட இயக்குநா்களான வெற்றிமாறன், அனுராக் காஷ்யப் ஆகியோா் இணைந்து ‘பேட் கோ்ள்’ என்ற திரைப்படத்தை தயாரித்தனா். இதை வா்ஷா பரத் இயக்கி

உள்ளாா். இந்த நிலையில், இந்தத் திரைப்படத்தில் சிறுவா்களை தவறாக சித்தரித்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் திரைப்படத்தின் முன்னோட்டத்தை (டீசா்) சமூக ஊடகங்களிலிருந்து நீக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

இந்த நிலையில், தென் மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்காவிடம் வழக்குரைஞா் வெங்கடேஷ் அளித்த புகாா் மனு:

சிறுவா், சிறுமியரின் ஆபாசக் காட்சிகள் இடம் பெற்ற ‘பேட் கோ்ள்’ திரைப்படத்தை இயக்கிய திரைப்பட இயக்குநா்கள் வெற்றிமாறன், அனுராக் காஷ்யப், வா்ஷா பரத், நடிகா்கள் உள்ளிட்ட திரைப்படக் குழுவினா் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.

டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சிவாங்கி!

டாப் குக் டூப் குக்கு என்ற சமையல் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனை பாடகி சிவாங்கி தொகுத்து வழங்கவுள்ளார்.குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிய செஃப் வெங்கடேஷ் பட், மீடியா மேசன்ஸ் நிறுவனத்துடன் இண... மேலும் பார்க்க

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நடிகர் கமல் ஹாசன் தேசிய விருதுகள் வென்ற பார்க்கிங் திரைப்பட குழுவினரை வாழ்த்தினார்.அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், எம்.எஸ்.பா... மேலும் பார்க்க

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

நடிகை வர்ஷினி சுரேஷ் பிரதான பாத்திரத்தில் நடிக்கும் மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.தெலுங்கு மொழியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பிரபலமான மகுவா ஓ மகுவா என்ற தொடர், தமிழ... மேலும் பார்க்க

சொந்த வீடு இல்லாதது குற்றமா? 3 பிஎச்கே சொல்ல வருவது என்ன?

ஒரு திரைப்படத்தை மதிப்பீடு செய்வதற்கு சில அளவுகோள்கள் உள்ளன. முதலில், அப்படம் நம் சிந்தனையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது? அதன் கதைக்கு கலை ரீதியான பங்களிப்பு இருக்கிறதா? இறுதியாக, சினிமா என்கிற மா... மேலும் பார்க்க

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான தலைவன் தலைவி படத்தின் இடம்பெற்ற பாடலான 'பொட்டல முட்டாயே’ 3 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மெனன... மேலும் பார்க்க

யோவ் நான் கேட்டேனா...? லோகேஷ் கனகராஜை கிண்டல் செய்த ரஜினி!

நடிகர் ரஜினி இயக்குநர் லோகேஷ் நேர்காணலை எவ்வளவு நேரம் பார்த்தாலும் முடியவில்லை என கிண்டலாக கூறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கூலி திரைப்படத்தின் ... மேலும் பார்க்க